“அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லையே”.. ஐபிஎல் மூலம் மெகா திட்டம்.. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்ட்யா!
மும்பை: 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் ஹர்திக் பாண்ட்யா போட்டுவைத்துள்ள மெகா திட்டத்தை கூறியுள்ளார்.
முதலில் இந்திய அணியில் இருந்தும், அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தற்போது மீண்டும் நல்ல நேரம் தொடங்கியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல்-ல் புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது.

பாண்ட்யாவின் சோக நிலைமை
கடந்த 2 சீசன்களாக ஒரு ஓவரை கூட வீசாமல் இருந்த பாண்ட்யாவின் மீது அகமதாபாத் அணி அதீத நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் இந்திய அணி நம்பவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை தற்போது முழு நேர ஆல்ரவுண்டராக இந்திய அணி பயன்படுத்தி வருகிறது. வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு அவரை தயார் செய்யவும் முயற்சித்து வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா திட்டம்
இந்நிலையில் அதற்கு ஆப்பு வைத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா. ஐபிஎல் குறித்து பேசிய அவர், நான் முழுமையான ஆல்ரவுண்டராக தயாராகிவிட்டேன். வரும் ஐபிஎல் தொடரில் தான் எனக்கு திருப்புமுனை. எனது பயிற்சிகள், திட்டங்கள் அனைத்தும் உலகக்கோப்பையை மனதில் வைத்து மட்டுமே உள்ளது. என் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்றுத்தர விரும்புகிறேன். அதற்காக தான் இவ்வளவு கடின உழைப்பை போட்டுள்ளேன். ஐபிஎல் தொடர் எனக்கு சிறந்த பயிற்சியாக இருக்கப்போகிறது எனக்கூறியுள்ளார்.

முழு நம்பிக்கை
மேலும் வெங்கடேஷ் ஐயர் தனது இடத்தை பிடிப்பாரா என்பது குறித்து பேசிய பாண்ட்யா, இந்திய அணியில் இடம்பிடிக்க எப்போதும் அவசர அவசரமாக தயாராவேன். ஆனால் இந்த முறை மிகவும் நிதானமாக மனதிற்கு ஓய்வு கொடுத்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். பயோ பபுள் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதெல்லாம் தாண்டி தற்போது முழு மன உறுதி, உடல் உறுதியுடன் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று பாண்ட்ய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ போட்ட திட்டம்
ஹர்திக் பாண்ட்யாவை இந்திய அணி மிஸ் செய்வதாக ஏற்கனவே அதிகாரிகள் சிலர் கூறியிருந்தனர். அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடிவிட்டால், நேரடியாக அணிக்கு எடுத்துக்கொள்ள பிசிசிஐ தயாராக உள்ளது. மேலும் இந்த முறை கேப்டனாகவும் செயல்படவிருப்பதால் அவரின் கேப்டன்சியை பிசிசிஐ எதிர்நோக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications