அன்று பாண்ட்யா கொடுத்த புகார்.. இன்று NCA -வின் தவறுகள் அம்பலம்.. பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு!!
மும்பை: ஹர்திக் பாண்ட்யா அன்று செய்த ஒரு விஷயம், இன்று இந்திய கிரிக்கெட்டில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
15வது ஐபிஎல் சீசன் கடந்த 3 வாரங்களாக படு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை புதிதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று டாப் இடத்தில் உள்ளது.

ஹர்திக்கின் கம்பேக்
குஜராத் அணியின் வெற்றிக்கு அதன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முக்கிய பங்கு வகிக்கிறார். இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 33(28), 31(27), 27(18), 50*(42), 87*(52) என குவித்துள்ளார். இதே போல பவுலிங், ஃபீல்டிங்கிலும் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்து வருகிறார். ஆனால் அவரின் கம்பேக் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதுகுவலி பாதிப்பு
முதுவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2 ஆண்டுகளாக சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA ) பயிற்சி பெற்றார். ஆனால் அதில் அவரால் சரியான உடற்தகுதியை மீண்டும் பெற முடியவில்லை.

பாண்ட்யா நடவடிக்கை
NCA மீது நம்பிக்கை இழந்த ஹர்திக் பாண்ட்யா, அங்கிருந்து வெளியேறி தனது சொந்த செலவில் வெளியில் பயிற்சி பெற்று வந்தார். ஆனால் அவர் மீது பிசிசிஐ அதிருப்தியடைந்தது. ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றால் NCA-வுக்கு திரும்ப வேண்டும் என்றும், அங்கு உடற்தகுதியை நிரூபித்தால் தான் அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

பிசிசிஐ எச்சரிக்கை
இந்நிலையில் இன்று தீபக் சஹார் விஷயத்தில் பாண்ட்யாவின் குற்றச்சாட்டு நிரூபனம் ஆகியுள்ளது. காலில் காயம் என சென்ற தீபக் சஹாருக்கு திடீரென முதுகில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் உடன் சேர்த்து டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
Recommended Video

அம்பலம்
ரவீந்திர ஜடேஜா நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார். இறுதியில் சுனில் கவாஸ்கர் கேள்வியெழுப்பியுடன் வெளியே அனுப்பப்பட்டார். இதே போல ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெயிக்வாட் என பலரும் காயத்தால் அனுமதிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பினர்.


Click it and Unblock the Notifications