Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சஸ்பென்ஸ் கேப்டன்சி” ஹர்திக்கிடம் உள்ள தனிச்சிறப்பு.. அகமதாபாத் அணியின் முடிவுக்கு முக்கிய காரணம்

சென்னை: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதால் முன்னணி அணிகள் சற்று பதற்றத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

Recommended Video

Hardik Pandya முதல் Rashid Khan வரை.. வலுவான அணியாக மாறிய Ahmedabad

ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பே தாங்கள் தக்கவைக்கப்போகும் 3 வீரர்களை தேர்வு செய்துள்ளன.

அகமதாபாத் அணி

அகமதாபாத் அணி

இதில் அகமதாபாத் அணியின் தேர்வுகள் தான் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அந்த அணி தற்போது ஹர்திக் பாண்ட்யாவை ( ரூ.16 கோடி ) கேப்டனாக முன்னிறுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாம, ரஷித் கான் ( ரூ.16 கோடி) மற்றும் சுப்மன் கில் ( ரூ.7 கோடி) ஆகியோரையும் நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஹர்திக் பாண்ட்யாவின் சொந்த ஊர் என்பதால் அணியை பிரபலப்படுத்துவதற்காக கேப்டனாக நியமித்தனர் எனக்கூறுகின்றனர். ஆனால் அது முக்கிய காரணமே கிடையாது. முழு உடற்தகுதி இல்லாமல் பயிற்சி மேற்கொண்டு வரும் ஹர்திக் பாண்யா, அனுபவத்தின் பேரிலும், சஸ்பன்ஸ் கேப்டன்சிக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2 முக்கிய அணிகள் குழப்பம்

2 முக்கிய அணிகள் குழப்பம்

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐபிஎல்-ல் நல்ல அனுபவம் உள்ளது. குறிப்பாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் முதன்மை வீரராக இருந்துள்ளார். எந்த நேரத்தில் ரோகித் சர்மா எப்படி வியூகம் அமைப்பார் என்ற முழு விவரமும் நன்கு அறிந்தவர். இதே போல தோனியுடன் மிக நெருங்கி பழகுபவர் ஹர்திக். தோனியின் செயல்பாடுகளையும் சமாளிப்பது பாண்ட்யாவுக்கு சுலபமான ஒன்று இந்த 2 அணிகளை சமாளித்தால் ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு மற்ற அணிகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

ஹர்திக்கின் மறுமுகம்

ஹர்திக்கின் மறுமுகம்

ஐபிஎல் தொடரில் உள்ள மற்ற அணி கேப்டன்கள், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்களின் கேப்டன்சி குறித்தும் ஹர்திக்கிற்கு நன்கு தெரியும். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி செய்து இதுவரை யாருமே பார்த்ததில்லை. இதுவே அனைத்து அணிகளுக்கும் பெரிய குழப்பமாக இருக்கும். அவர் என்ன முடிவு எடுப்பார், எப்படிபட்ட வியூகங்களை அமைக்கப்போகிறார் என எந்த ஒரு அணிக்கும் தெரியாது என்பதால் அகமதாபாத் அணிக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, January 18, 2022, 12:00 [IST]
Other articles published on Jan 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+