Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாயங் அகர்வாலை வம்பிழுத்த ஹர்திக்.. பஞ்சாப் தோல்வி குறித்து ஏளனம்..ரசிகர்களை கவர்ந்த பஞ்சாப் கேப்டன்

மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி 2 சிக்சர் விளாசி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 95 சதவீதம் பஞ்சாப் அணி கையிலேயே வெற்றி இருந்தது. ஆனால் கடைசி 2 பந்தில் கதையே மாறியது. ஆட்டத்தையே கோட்டை விட்டோம் என ஓடியன் ஸ்மித் மனம் உடைந்தார்.

தோல்வியை தாங்க முடியாமல் சோகத்தில் இருந்த ஓடியன் ஸ்மித்தை கேப்டன் மாயங் அகர்வால் ஆறதல் கூறி தேற்றினார்.

மாயங் அகர்வாலின் செயல்

மாயங் அகர்வாலின் செயல்

இதனைத் தொடர்ந்து பேசிய மாயங் அகர்வால், இது கொஞ்சம் கடினமான தோல்வி. ஆனால் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். நாங்கள் ஒரு 7 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். ஆனால் இந்த இலக்கை நாங்கள் அடைந்ததற்கு முதலில் மகிழ்ச்சி அடைகிறோம். கடைசி ஓவரில் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறி இருக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஓடியன் ஸ்மித்துக்கு ஆதரவு அளிப்போம்.

ஹர்திக் ஏளனம்

ஹர்திக் ஏளனம்

இது வெறும் கிரிக்கெட் போட்டி தான். அணியில் ஒவ்வொருவருக்கும் ஒருவர் உறுதுணையாக இருப்போம் என்றார். கேப்டனாக மாயங் அகர்வால் ஓடியன் ஸ்மித்துக்கு அளித்த ஆதரவு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. ஆனால் வெற்றி பெற்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேச்சில் கொஞ்சம் திமிரும், ஏளனமும் தெரிந்தது.

இரக்கம்

இரக்கம்

இது தொடர்பாக பேசிய அவர், முதலில் நான் சோர்வாக உள்ளேன். உடல் ஒத்துழைப்பு தருகிறது. எனினும் அடுத்த போட்டிக்கு தயாராகி விடுவேன். முதலில் பஞ்சாப் அணியை பார்த்து நான் இரக்கப் படுகிறேன். இந்தப் போட்டியில் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அப்படி இருந்தோம் தோற்றுவிட்டார்கள். சுப்மான் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சுப்மான் அசத்தல்

சுப்மான் அசத்தல்

என்னிடம் நான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க என்று சுப்மான் கில் கூறினார். தமிழக வீரர் சாய் சுதர்சனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கும் ஏன் பாராட்டுக்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். தொடக்க வீரராக சுப்மான் கில் தொடர்ந்து 2 போட்டியில் பெரிய ஸ்கோர் அடித்து வருகிறார். இது இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, April 9, 2022, 13:34 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+