
ஹர்திக் பாண்ட்யா கம்பேக்
பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி இதுவரை 8 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதே போல ஹர்திக் பாண்ட்யா 3வது வீரராக களமிறங்கி பொறுப்புடன் விளையாடுவதால் வெற்றிகள் குவிகிறது. இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 295 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 73.75 ரன்கள் ஆகும். இதே போல பவுலிங்கிலும் 140+ கிமீ வேகத்தில் அசால்டாக போடுவதால் முழு ஃபிட்னஸை பெற்றுவிட்டார்.

பாண்ட்யா கோரிக்கை
இந்திய அணியில் பாண்ட்யாவின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவர் கேட்டுள்ள பேட்டிங் இடம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போது, 3வது இடத்தில் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியிலும் தனக்கு அதே இடம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

நிச்சயம் விடமாட்டேன்
தொடர்ந்து பேசிய அவர், No.3 என்னுடைய கனவாகும். 2016ம் ஆண்டு மும்பை அணிக்காக ஆடிய போது 3வது வீரராக களமிறக்கினர். ஆனால் அதன்பிறகு நேரம் அமையவில்லை. ஆனால் இந்த முறை எளிதில் விடமாட்டேன். எப்படியாவது டாப் ஆர்டர் பேட்டிங் இடத்தை பிடித்துவிடுவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

வழிவிடும் கோலி
இதற்கேற்றார் போல தான் விராட் கோலியும் தற்போது சொதப்பி வருகிறார். நடப்பு தொடரில் 8 போட்டிகளில் ஆடியுள்ள கோலி 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் இரண்டு டக் அவுட்கள் ஆகும். ஓப்பனிங் களமிறங்கினாலாவது சிறப்பாக ஆடுவார் என்று பார்த்தால், அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கோலி - ஹர்திக் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











