Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“குழந்தையாவே மாறிட்டாங்க” உற்சாகத்தில் துள்ளி குதித்த ஹர்திக்கின் மனைவி.. இணையத்தை கலக்கும் வீடியோ!

மும்பை: குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றவுடன் ஹர்திக் பாண்ட்யாவின் மனைவி உற்சாகத்தில் மிதந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 195/6 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 199/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

குஜராத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் ஏமாற்றியதால், கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மார்கோ ஜேன்சன் வீச, களத்தில் ராகுல் தேவட்டியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் இருந்தனர். முதல் பந்து சிக்ஸருக்கு செல்ல 2வது பந்து சிங்கிள் ஆனது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவர் அதிரடி

கடைசி ஓவர் அதிரடி

பின்னர் ஸ்ட்ரைக்கிற்கு வந்த ரஷித் கான் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட, கடைசி பந்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. யாருமே எதிர்பார்க்காத இந்த திருப்புமுனையால் மைதானத்தில் ரசிகர்கள் மிக உற்சாகமாக இருந்தனர். டக் அவுட்டில் குஜராத் வீரர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

நடாஷாவின் கொண்டாட்டம்

நடாஷாவின் கொண்டாட்டம்

இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தை விட கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் மனைவி நடாஷா, வெளிப்படுத்திய மகிழ்ச்சி தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷித் கான் சிக்ஸர் அடித்தவுடன், தனது இருக்கையில் இருந்து எழுந்த நடாஷா ஒரு சிறு குழந்தையை போன்று துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் மிகவும் சத்தமாக கூச்சலும் போட்டார். இதனை களத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா பார்த்து சிரித்தார்.

மீண்டும் முதலிடம்

நேற்று பெற்ற வெற்றியின் மூலம் குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல் யாரும் அசைக்க முடியாத அசுர பலத்திலும் இருப்பதை நிரூபித்து காட்டியுள்ளது.

Story first published: Thursday, April 28, 2022, 18:11 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+