IPL 2022: கேப்டன் ஆகிறார் ஹர்திக் பாண்ட்யா..பெரும் ட்விஸ்ட் கொடுத்த புதிய அணி.. இளம் வீரருக்கு ஆப்பு
மும்பை: ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜனவரி மாதத்திலேயே நடைபெறுவதாக இருந்த இந்த மெகா ஏலம் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போனது இதற்கு காரணம் அகமதாபாத் அணி தான்.

புதிய அணிகளின் தேர்வு
புதிதாக வந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாகவும், ரஷிக் கான் ஆகியோரையும் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதே போல அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்து ஒப்பந்தம் செய்தது.

ட்விஸ்ட் கொடுத்த அகமதாபாத்
இந்நிலையில் பெரும் திருப்புமுணையை அகமதாபாத் அணியின் நிர்வாகம் கொடுத்துள்ளது. அதாவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்து முடிவெடுத்துள்ளது. இதே போல ரஷித் கானையும் அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. ரஷித் கான் முதலில் லக்னோ அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதிலும் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸின் பரிதாபம்
அகமதாபாத் அணியின் இந்த அறிவிப்பால், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரின் நிலைமை தான் பரிதாபமாகியுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக வெளியேறியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் காயத்தில் இருந்து மீண்ட பிறகும் ஸ்ரேயாஸுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை என்பதால் அதனை பழிவாங்க எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.
Recommended Video

ஹர்திக்கிற்கு நெருக்கடி
மற்றொரு புறம் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் கடும் நெருக்கடிகள் உள்ளன. அவர் பந்துவீசாமல் இருப்பதால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கழட்டிவிட்டது. எனவே அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் தான் அகமதாபாத் அணியின் கேப்டனாக இருக்க சரியான தேர்வாக இருப்பார் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications