For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த 2 பேருக்கு தான் அதிக பணம்”.. மெகா ஏலத்தில் கவனம் பெரும் 2 இளம் வீரர்கள்.. ஹர்ஷா போக்லே உறுதி!

மும்பை: ஐபிஎல் தொடரில் 2 இளம் வீரர்களின் ஏலம் தான் தனி கவனத்தை பெறப்போகிறது என ஹர்ஷா பாக்ளே கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு எந்தெந்த வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மெகா ஏலம்

மெகா ஏலம்

அதன்படி இந்தாண்டு டேவிட் வார்னர், ரஷித் கான், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ரபாடா உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் அனைத்து அணிகளாலும் குறிவைக்கப்படுவார்கள். குறிப்பாக ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு கேப்டன்களே தேவைப்படுவதால் வார்னர் தான் அதிக தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 2 இளம் வீரர்கள் தான் அதிக மதிப்புடன் செல்வார்கள் என கிரிக்கெட் வல்லுநர் ஹர்ஷா போக்லே கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மும்பை அணியின் முன்னாள் வீரர் இஷான் கிஷான் மற்றும் தமிழக வீரர் ஷாருக்கான் ஆகியோரின் ஏலத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன். மும்பை அணிக்காக பல ரன்களை குவித்த இஷான் தற்போது இந்திய அணியின் எதிர்காலமாக வளம் வருகிறார். அதிரடியுடன் சேர்ந்து விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் அதிக டிமேண்ட் இருக்கப்போகிறது.

அடுத்த யூசஃப் பதான்

அடுத்த யூசஃப் பதான்

தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டத்தில் நான் பழைய யூசஃப் பதானையே பார்க்கிறேன். அவர் களத்திற்கு வந்தால் ஏதேனும் ஒரு தாக்கம் இருக்கப்போகிறது என்பதை உணர்த்துகிறார். அவரிடம் ஒரு தீப்பொறி தெரிகிறது. எனவே இந்தாண்டு ஷாருக்கானை ஏலம் எடுக்கும் அணி நல்ல பலன் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.

சம்பள விவரம்

சம்பள விவரம்

ஷாருக்கான் கடந்தாண்டு பஞ்சாப் அணியால் ரூ.5.25 கோடிக்கு வாங்கப்பட்டார். மிடில் ஆர்டரில் விளையாடிய அவரின் சராசரி 21.85 ரன்கள் ஆகும். இதே போல மும்பை அணிக்காக 4 ஆண்டுகளாக விளையாடிய இஷான் கிஷான் 45 போட்டிகளில் 1,113 ரன்களை விளாசியுள்ளார். இவரை மும்பை அணியே திரும்ப ஏலம் எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Saturday, January 29, 2022, 20:13 [IST]
Other articles published on Jan 29, 2022
English summary
Harsha Bhogle thinks 2 young players will fetch a high price tag in IPL 2022 mega auction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+