For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கின் மனைவியை இழுப்பதா??.. கிளம்பிய புதிய சர்ச்சை.. கொந்தளித்த ஹர்ஷா போக்லே!!

மும்பை: தினேஷ் கார்த்திக் குறித்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிய நிலையில் அவரின் மனைவி குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

Dhoniக்கு அடுத்து Dinesh Karthik? T20 WC Squadக்கு வருவாரா? | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீத்தியது.

இந்த போட்டியில் சிஎஸ்கே வென்றாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது தினேஷ் கார்த்திக் தான்.

பெஸ்ட் ஃபினிஷர்

பெஸ்ட் ஃபினிஷர்

நடப்பு தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணிக்காக அவுட்டாகாமல் வெற்றி பெற்றுத்தரும் தினேஷ் கார்த்திக் நேற்றும் அதிரடி காட்டினார். ஆர்சிபி அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த போது வந்த அவர், 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களை விளாசித் தள்ளினார்.

 ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இதனையடுத்து இந்தியாவின் சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் தான் இருப்பார் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். இந்திய கிரிக்கெட் அணி சரிவுக்கு செல்லும் போதெல்லாம்,,தோனி களத்தில் இருக்கும் வரை வெற்றி பெறுவோம் என நம்புவார்கள். அதே போன்ற காட்சி நேற்று தினேஷ் கார்த்திக் இருந்த போது நடந்தது.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் அவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல், ஸ்குவாஸ் வீராங்கனை ஆவார். உலக இரட்டையர் பிரிவு சாம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்ட அவர், கலப்பு பிரிவு மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு என இரண்டிலுமே சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

 சர்ச்சை பதிவு

சர்ச்சை பதிவு

இதுகுறித்து செய்தி வெளியிட்ட தனியார் ஊடகம், தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றதாக பதிவிட்டது. இதனை கண்டு ஆத்திரமடைந்த பிரபல கிரிக்கெட் வல்லுநர் ஹர்ஷா போக்லே, " தீபிகா பல்லிக்கல் தனது சொந்த காலில் நின்று சாதித்துள்ளார். அவரின் கணவரின் பெயரை முன்னர் பதிவிட்டு செய்தி வெளியிடுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை, உடனடியாக நீக்குங்கள்" என கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் மீது ரசிகர்களும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 13, 2022, 13:46 [IST]
Other articles published on Apr 13, 2022
English summary
Dinesh karthik wife Dipika Pallikal ( தினேஷ் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிக்கல்) தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிக்கல் குறித்து வெளியான சர்ச்சை செய்திக்கு ஹர்ஷா போக்லே கொந்தளித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+