ஐபிஎல் வரலாற்றில் இதுவே 2வது முறை.. ஹர்சல் பட்டேல் படைத்த வினோத சாதனை..
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி வீரர் ஹர்சல் பட்டேல் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.இதில் பெங்களுரு அணி அசத்தலாக பந்துவீசினர்.
இதனால் சிஎஸ்கே அணியிடம் அதிரடி காட்டிய கேகேஆர் அணி, ஆர்சிபியிடம் பொட்டி பாம்பாக பம்மியது.

அசத்திய ஹர்சல்
இந்தப் போட்டியில் ஆர்சிபியின் பந்துவீச்சாளர்களான ஹசரங்கா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் அபாரமாக பந்துவீச, ஹர்சல் பட்டேல் தனித்துவமான சாதனையை படைத்தார். சொல்லப் போனால் அவரால் தான் ஆட்டமே மாறியது என்று கூறலாம். இதன் மூலம் டி20 உலககோப்பையில் இவருக்கு இடம் நிச்சயம் என்றே கூறலாம்.

ஹர்சல் பிளான்
கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களத்தில் அதிரடி வீரர்களான சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்டிரு ரஸில் நின்றனர். இவ்விருவரும் அதிரயாக ஆடி, கொல்கத்தா அணிக்கு ரன்கள் சேர்த்துவிடலாம் என்ற பிளான் போட்டு வைத்தனர். அந்த பிளானை ஹர்சல் தகர்த்து எறிந்தார்.

அபார யுத்தி
ரன்களை சுத்தமாக கட்டுப்படுத்தி அழுத்தத்தை அதிகரிக்கும் யுத்தியை பயன்படுத்தினார் ஹர்சல் பட்டேல். 6 பந்திலும் சிறிது வெரியசன் காட்டிய ஹர்சல், பந்து எங்கு செல்லுமோ அங்கே ஃபில்டரை முன்கூட்டியே நிறுத்தினார். இதனால் ரன் அடிக்க முடியாத விரக்தியில் பொறுமை இழந்து சாம் பில்லிங்ஸ் கோலியிடம் பிடிப்பட்டார். இந்த ஓவரில் ரன் செல்லவில்லை.

அரிய சாதனை
அதே யுத்தியை ஆண்டிரு ரஸிலிடம் பயன்படுத்தினார்.ஆனால் பந்தின் வேகத்தை கொஞ்சம் அதிகபடுத்தினார். மேலும் ரஸில் பேட் வீசினாலும் பந்து படாத வகையில் கொஞ்சம் அகலப்பந்தாக வீச அதை அடிக்க முயன்று, விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் பிடிப்பட்டார். இந்த ஓவரிலும் ரன் போகவில்லை. இதன் மூலம், ஒரே போட்டியில் 2 மெய்டன் மற்றும் விக்கெட் வீழ்த்திய அரிய சாதனையை ஹர்சல் பட்டேல் படைத்தார். இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு முகமது சிராஜ் 2 மெய்டன் ஓவர் வீசி அசத்தினார்.


Click it and Unblock the Notifications