For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தாவுக்கு பறக்கும் ஆர்சிபி.. மகிழ்ச்சியில் கோலி அண்ட் கோ.. 4 அணிகளின் விவரம் இதோ

கொல்கத்தா: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி அணி மும்பையுடன் தோற்றதன் மூலம் ஆர்சிபி பிளே ஆப்க்கு சென்றது. இந்த போட்டியை ஆர்சிபி வீரர்கள் பெரிய திரையில் அமர்ந்த கண்டு களித்தனர்.

போட்டி முடிந்ததும், கொல்கத்தாவுக்கு புறப்பட்டு செல்வதாக கேப்டன் கோலி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரும் செவ்வாய் கிழமை நடைபெறும் முதல் குவாலிபையரில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு குவாலிபையர் 2 வில் நடைபெறும்.

IPL 2022 – Here are the 4 Teams Qualified for playoffs

எலிமினேட்டர் போட்டி வரும் புதன்கிழமை நடைபெறும் இதில் 3 வது மற்றும் 4வது இடம் பிடித்துள்ள லக்னோ மற்றும் ஆர்சிபி மோதும். இதில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். இதில் வெற்றி பெறும் அணி வரும் வெள்ளிகிழமை நடைபெற உள்ள குவாலிபையர் 2வில் (குவாலிபையர் 1 தோற்ற அணியுடன்) விளையாடும்.

இதில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த ஞாயிற்றுகிழமை மே 29ஆம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த நிலையில் கொல்கத்தாவில் கன மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

Story first published: Sunday, May 22, 2022, 9:04 [IST]
Other articles published on May 22, 2022
English summary
IPL 2022 – Here are the 4 Teams Qualified for playoffs கொல்த்தாக்கு பறக்கும் ஆர்சிபி.. மகிழ்ச்சி கோலி அண்ட் கோ.. 4 அணிகளின் விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+