Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் அதிருப்தியில் ஜடேஜா.. சிஎஸ்கே கேப்டனாக தோனி மீண்டும் பதவியேற்றது ஏன்.. ரசிகர்கள் அறியா பின்னணி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் தோனி பதவியேற்றதன் பின்னணியில் ஜடேஜாவின் அதிருப்தி தான் இருந்துள்ளது.

ஐபிஎல் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணிக்கு இந்தாண்டு சற்று மோசமாகவே அமைந்ததுள்ளது.

இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் ப்ளே ஆஃப் செல்வதே கடினமாகியுள்ளது.

சிஎஸ்கே நிலைமை

சிஎஸ்கே நிலைமை

தொடக்கத்திலேயே தீபக் சஹார் இல்லை, தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது என பல பின்னடைவுகள் ஏற்பட்டன. இதன் பின்னர் தொடர் தோல்விகளுக்கு ஜடேஜாவின் கேப்டன்சி சரியில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மீண்டும் கேப்டன்

மீண்டும் கேப்டன்

இந்நிலையில் தான் சிஎஸ்கே கேப்டன் பதவியை தோனியே மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கு காரணம் ஜடேஜாவின் அதிருப்தி தான். போட்டிகளின் போது ஜடேஜாவால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை எனத்தெரிகிறது. தீடீரென பவுலிங் மற்றும் ஃபீல்டிங் மாற்றங்களை தோனியே கையில் எடுத்துக்கொள்கிறார்.

வீரர்களின் குழப்பம்

வீரர்களின் குழப்பம்

இக்கட்டான சூழல்களில் எல்லாம் தோனியே கேப்டன்சியை செய்வதை தொலைக்காட்சியிலேயே கட்டினர். இப்படி இருக்க, அணி வீரர்கள் யார் சொல்வதை செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனால் ஜடேஜாவும் அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதுவும் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஓய்வுக்கு பிறகு

ஓய்வுக்கு பிறகு

எனவே இதனையெல்லாம் தவிர்க்க தான் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளதாக தெரிகிறது. அடுத்தாண்டு தோனி ஓய்வுபெற்ற பின்னர் முழு நேர கேப்டனாக ஜடேஜா செயல்படும் வகையில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Story first published: Saturday, April 30, 2022, 21:29 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+