Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி -கால்குலேட்டர் பிரிக்க முடியாத லவ் ஸ்டோரி.. கடினமான பிளே ஆஃப் வாய்ப்பு.. சரிந்தது எங்கே?

மும்பை: ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணிகளின் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது மீண்டும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எத்தனை நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், கடைசி நேரத்தில் தோற்று கோப்பையை தவறவிடுவது ஆர்சிபி அணியின் ஸ்டைல்.

இம்முறை புதிய கேப்டன், புதிய வீரர்கள் என்று புது பொழிவுடன் ஆர்சிபி அணி களமிறங்கி, தற்போது மீண்டும் பழைய சூழலுக்கே தள்ளப்பட்டுள்ளது.

ஆர்சிபி பயணம்

ஆர்சிபி பயணம்

ஆர்சிபியின் முதல் பாதியில், அதாவது முதல் 7 போட்டியில் 5 போட்டியில் வென்ற அந்த அணி, 2 போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியது. பிறகு நடைபெற்ற 6 போட்டியில் ஹாட்ரிக் தோல்வி உள்பட 4 போட்டியில் தோல்வியை தழுவியது. பஞ்சாப்க்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் கூட ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் மைனஸ் 0.12 என இருந்த ரன் ரேட் மேலும் சரிந்தது.

இக்கட்டான நிலை

இக்கட்டான நிலை

இதன் மூலம் 13 போட்டியில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தற்போது 14 புள்ளிகளுடன் மைனஸ் 0.32 ரன் ரேட்டுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதனால் குஜராத்துக்கு எதிராக ஒரு போட்டியில் வென்றாலும், மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும். ஆர்சிபி ஒரு வலுவான இடத்தில் தான் புள்ளி பட்டியலில் அமர்ந்திருந்தது.

திரும்பிய காலம்

திரும்பிய காலம்

எப்போதுமே ஆர்சிபி அணி ரசிகர்கள் லீக் சுற்றில் தொடர்ந்து தோல்விகளை பெற்று, இந்த அணி, அந்த அணியை ஜெய்த்தால் தான் நமக்கு பிளே ஆப் வாய்ப்பு என்று எப்போதும் கையில் கால்குலேட்டருடன் சுற்றி கொண்டு இருப்பார்கள். ஆனால் இம்முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் பலமான இடத்தில் இருந்தது. இதனால் அந்த அணி ரசிகர்கள் எப்போதும் டாப்பில் இருந்த சிஎஸகே, மும்பை ரசிகர்களை இம்முறை கிண்டல் செய்தனர்.

யார் தோற்க வேண்டும்?

யார் தோற்க வேண்டும்?

ஆர்சிபியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் குஜராத் அணியுடன் ஆர்சிபி வெற்றி பெற்றே ஆக வேண்டும். மேலும் ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் , கொல்கத்தா ஆகிய அணிகள் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும். அப்படி நடந்தால் தான் பிளே ஆப் வாய்ப்பு ஆர்சிபிக்கு கிடைக்கும்

Story first published: Saturday, May 14, 2022, 20:24 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+