For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்ட அனைத்து கணக்கும் தப்பு.. கவலையில் காவ்யா மாறன்.. 16 போட்டியில் 3-ல் மட்டுமே எஸ்ஆர்ஹச் வெற்றி

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணி கடைசியாக விளையாடிய 16 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடும் சோகத்தில் உள்ளது.

கடந்த சீசனில் ஐதராபாத் அணி படுதோல்வியை தழுவியது. இதனால் மெகா ஏலத்தின் போது ஐதராபாத் அணி பல மாற்றங்களை செய்து, புதிய சீசனில் களமிறங்கியது.

ஆனால் ஐதராபாத் அணி போட்ட கணக்குகள் அனைத்தும் மெகா ஃபெயிலராகி விட்டதால் அணி உரிமையாளர் காவ்யா மாறன் சோகத்தில் உள்ளார்.

கடைசி இடம்

கடைசி இடம்

2013 ஆம் ஆண்டு சன் குழமத்தில் வாங்கப்பட்ட ஐதராபாத் அணி முதல் சீசனில் பிளே ஆஃப் வரை சென்றது. அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று ஐதராபாத் அணி அசத்தியது. அதன் பின்னர், 2020 வரை அனைத்து சீசனிலும் பிளே ஆப் வரை சென்ற ஐதராபாத் அணி, 2021ஆம் ஆண்டு சீசனில் கடைசி இடத்துக்கு சென்றது.

தவறான கொள்கை

தவறான கொள்கை

நன்றாக விளையாடிய அணி இப்படி தலைக்கீழ் மாறியது ஏன் என்று யோசித்தால் அதற்கு முழு பொறுப்பும் டாம் மூடியின் அரசியல் தான் காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு சில போட்டியில் சரியாக விளையாடாததால் வார்னரை டாம் மூடி ஓரங்கட்டியது, ஐதராபாத் அணியின் பலமாக கருதப்பட்ட ரஷித் கானை கைவிட்டது என அந்த அணி அடுக்கடுக்கான தவறுகளை செய்தது.

வில்லியம்சன் காயம்

வில்லியம்சன் காயம்

ஐதராபாத் அணி நட்சத்திர வீரர் வில்லியம்சன் மீது நம்பிக்கை வைத்தாலும், அவர் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ளதால் அவரால் பழைய மாதிரி விளையாட முடியவில்லை. மேலும் ஐதராபாத் அணி எதிர்காலத்தை கருத்தில் வைப்பதாக கூறி முற்றிலும் இளம் வீரர்கள் மீது பணத்தை முதலீடு செய்தது.

காவ்யா விரக்தி

காவ்யா விரக்தி

ஆனால், அவர்கள் நம்பிய இளம் வீரர்களான அப்துல் ஷமத், அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் தொடர்ந்து அந்த அணியின் காலை வாரி வருகின்றனர். இதனால் ஐதராபாத் அணி புதிய சீசனிலும் ஹாட்ரிக் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.புதிய அணியான லக்னோவிடம் தோற்றதால் காவ்யா மாறன் மைதானத்தில் விரக்தியில் நின்றார். இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Tuesday, April 5, 2022, 12:27 [IST]
Other articles published on Apr 5, 2022
English summary
IPL 2022 – Huge Mistakes of SRH Team owner Kavya Maran as team faces hattrick lost போட்ட அனைத்து கணக்கும் தப்பு.. கவலையில் காவ்யா மாறன்.. 16 போட்டியில் 3-ல் மட்டுமே எஸ்ஆர்ஹச் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+