Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவுக்கு பெரும் பின்னடைவு..இன்றைய ஆட்டத்தில் அதிரடி வீரர் இல்லை..என்ன செய்ய போகிறார் ஸ்ரேயாஸ்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 8வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியை கண்டுள்ளது.

இதனால் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் கொல்கத்தா அணி வீரர்கள் உள்ளனர்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்டிங் எடுப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ரானா உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் பந்துவீச்சில் கொல்கத்தா அணி நெருக்கடி தந்தாலும் , ஆட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை.இதனால் செய்த தவறை திருத்தும் முனைப்புடன் கொல்கத்தா அணி உள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

எனினும் கேகேஆர் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேகேஆர் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஆண்டிரு ரஸில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஃபில்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. இதனால், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் பங்குபெறுவது சந்தேகமே.

இலங்கை வீரருக்கு வாய்ப்பு?

இலங்கை வீரருக்கு வாய்ப்பு?

இதனால் ஆண்டிரு ரஸிலுக்கு பதிலாக இலங்கை ஆல்ரவுண்டர் சமிகா கருணரத்னே அல்லது முகமது நபியை கேகேஆர் அணி தேர்வு செய்யலாம். ஒருநாள் ஓய்வுக்கு பிறகு உடனடியாக 3வது போட்டி நடைபெறுவது கொல்கத்தா அணி வீரர்களுக்கு பாதகமாக கருதப்படுகிறது. எனினும் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விளையாடுவதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம் என்று கேகேஆர் பயிற்சியாளர் மெக்குல்லம் கூறியுள்ளார்.

5வது பந்துவீச்சாளர்

5வது பந்துவீச்சாளர்

கேகேஆர் அணியின் பந்துவீச்சு பலமாக கருதப்படுகிறது. இந்திய வீரர் உமேஷ் யாதவ், டிம் செதி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி என 4 வீரர்களும் எதிரணியை மிரட்டுகின்றனர். இதில் 5வது பந்துவீச்சாளர் மட்டும் ஒரு அளவுக்கு கை கொடுத்தால் கேகேஆர் அணியின் பலம் மேலும் அதிகமாகும்.

Story first published: Friday, April 1, 2022, 17:05 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+