For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே வில் இணைந்த குட்டி தோனி.. பயிற்சியில் கலக்கும் U-19 வீரர்.. அந்த சிக்சர் நியாபகம் இருக்கா?

சூரத்: ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையில் கலக்கிய தினேஷ் பானா தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

17 வயதான தினேஷ் பானா, தோனியை போலவே பேட்டிங் செய்யும் அதிரடி விக்கெட் கீப்பர். இவர் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு காரணம், அண்டர் 19 உலகக் கோப்பையில் இவர் ஆடிய 2 இன்னிங்ஸ் தான். இவரின் புகழை உலகம் அறிய செய்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போது களத்துக்கு வந்தார் தினேஷ் பானா. எதிர்கொண்ட நான்கே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் தினேஷ் பானா. இதன் மூலம் 260, 270 ஐ தான் இந்திய அணி தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 290 ஐ ஸ்கோர் தொட்டது.

ஃபைனல் சிக்சர்

ஃபைனல் சிக்சர்

இதே போன்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், 5 பந்துகளில் 13 ரன்கள் விளாசினார். இதில் தோனி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்சர் அடித்தது போல், அதே ஷாட் ஆடி சிக்சர் அடித்து உலகக் கோப்பையை வென்று தந்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதனையடுத்து தினேஷ் பானாவின் பெயர் ஐபிஎல் ஏலத்தில் கடைசியில் சேர்க்கப்பட்டது. ஆனால் மெகா ஏலத்தில் அவர் பெயர் ஏல மேடைக்கு வரவே இல்லை. அதற்கு காரணம், 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஒரு ரஞ்சி போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், தினேஷ் பானா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போய்விட்டார்.

Recommended Video

IPL 2022: IPL Count Down Mumbai Indians Unique Record In The History Of IPL | Oneindia Tamil
பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

இந்த நிலையில், சூரத்தில் நடைபெறும் சிஎஸ்கே பயிற்சியில் பங்கேற்கும் படி தினேஷ் பானாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பயிற்சியில் பங்கேற்று, தோனியிடம் பாடம் கற்று வருகிறார். இதனால் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் தினேஷ் பானாவை சிஎஸ்கே தட்டி தூக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Story first published: Thursday, March 17, 2022, 7:58 [IST]
Other articles published on Mar 17, 2022
English summary
IPL 2022- India U19 star Dinesh Bana Joins CSK Practice session சிஎஸ்கே வில் இணைந்த குட்டி தோனி.. பயிற்சியில் கலக்கும் U-19 வீரர்.. அந்த சிக்சர் நியாபகம் இருக்கா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+