6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு
மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் லீக் சுற்றுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்த தொடர் முடிந்தவுடனே தென்னாப்பிரிக்காவுடன் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது.

தென்னாப்பிரிக்க சீரிஸ்
இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் ஜுன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் தான் பிசிசிஐ தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஐபிஎல்-ல் விளையாடியதை பொறுத்து தேர்வு அமையவுள்ளது.

அணி தேர்வு
அதன்படி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்படவுள்ளது. இவர்கள் ஜூலையில் நடைபெறும் இங்கிலாந்து தொடருக்கு தயாராகின்றனர். எனவே புதிய வீரர்களை கொண்ட புது அணி தான் உருவாக்கப்படவுள்ளது.

6 பேருக்கு காயம்
இந்நிலையில் அதிலே தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் முக்கிய வீரர்கள் 6 பேர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
தீபக் சஹார் - காலில் காயம்
ரவீந்திர ஜடேஜா - கையில் காயம்
சூர்யகுமார் யாதவ் - கையில் காயம்
ஹர்ஷல் பட்டேல் - உள்ளங்கையில் காயம்
அஜிங்கியா ரகானே - தசைப்பிடிப்பு
பிரித்வி ஷா - டைப்பாய்ட் காய்ச்சல்

யார் கேப்டன்
இப்படி 6 முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது, நிறைய அறிமுக வீரர்களை வைத்து தான் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணி விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications