Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Breaking: பிஃப்ரவரியில் ஐபிஎல் மெகா ஏலம்.. பிசிசிஐ போட்ட அதிரடி ப்ளான்.. எங்கு.. எப்போது தெரியுமா?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள தேதி மற்றும் எங்கு நடக்க போகிறது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரி ஒருவர் கொடுத்துள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இருந்து 2 புதிய அணிகள் சேர்க்கப்படுவதால் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதே போல லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதால் தற்போது அனைவரின் பார்வையும் மெகா ஏலத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அவை முதலில் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஐபிஎல் அணிகளின் ஏலம் துபாயில் நடந்ததால் மெகா ஏலமும் துபாயில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியது.

ஏலம் ஒத்திவைப்பு

ஏலம் ஒத்திவைப்பு

இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தேதிகள் குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருமாத காலம் ஒத்திவைத்து ஃபிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் நடைபெறும் எனக்கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த முறை மெகா ஏலமானது பிப்ரவரி 7,8ம் தேதி என 2 நாட்களாக பிரித்து நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு 2 நாட்களுக்கு மெகா ஏலம் கோலாகலமாக நடத்தப்பட்டது.

எங்கே நடக்கிறது?

எங்கே நடக்கிறது?

வீரர்களின் ஏலம் இந்தியாவில் தான் நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டல்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை இறுதியானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். அங்கு குறிப்பிட்ட அளவிலான நபர்கள் தான் அனுமதிக்கப்படவுள்ளனர்.

 ஏன் இந்த தாமதம்

ஏன் இந்த தாமதம்

ஐபிஎல் ஏலம் தாமதமானதற்கு புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணியே பார்க்கப்படுகிறது. அந்த அணியை வாங்கியுள்ள சிவிசி கேப்பிடல்ஸ் நிறுவனம், சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படுவதற்கு தான் தாமதாகி வருகிறது. விரைவில் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு மெகா ஏலத்திற்கான நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.

Story first published: Wednesday, December 22, 2021, 19:04 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+