Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே பற்றவைத்த நெருப்பு.. மும்பைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அணிகள்.. பிசிசிஐக்கு நெருக்கடி!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவதாக மற்ற அணிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சிறப்பாக முடிவுற்ற சூழலில் அடுத்ததாக போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

போட்டிகளின் அட்டவணை மற்றும் மைதானங்கள் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு போட்டிகள் அனைத்தையும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடத்தி முடித்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மும்பை வான்கடே, DY பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் புனே மைதானங்களும் அகமதாபாத் மோதிரா மைதானமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த மைதானங்கள்

எந்தெந்த மைதானங்கள்

மொத்தமுள்ள்ள 70 லீக் போட்டிகளில் 55 போட்டிகள் மும்பையில் உள்ள 3 மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. மீதமுள்ள 15 போட்டிகள் புனேவில் நடக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் அனைத்துமே அகமதாபாத்தில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

அணிகள் போர்க்கொடி

அணிகள் போர்க்கொடி

இந்நிலையில் இதற்கு மற்ற அணிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மற்ற அணிகள் மட்டும் தங்களது ஹோம் மைதானங்களை விட்டுவிட்டு, வேறு இடத்திற்கு சென்று விளையாட வேண்டும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் தனது ஹோம் மைதானமான வான்கடேவில் விளையாடுமா? இதில் துளிக்கூட நியாயமே இல்லை என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிஎஸ்கேவுக்கு பலன்

சிஎஸ்கேவுக்கு பலன்

இதில் மிகப்பெரிய ஆதாயத்தை சிஎஸ்கே அணி தான் தேடுகிறது எனத்தெரிகிறது. தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் எனக்கூறியுள்ளார். இதற்காக சிஎஸ்கே ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளன. இதுபோன்ற சூழலில் தான் பிசிசிஐ வேறு மைதானங்களுக்கு மாற்றியுள்ள

Recommended Video

IPL 2022: CSK and captain MS Dhoni are in upset, after BCCI makes a bold decision | Oneindia Tamil
பிடிவாதம்

பிடிவாதம்

எனவே இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருந்து சென்னையில் போட்டிகளை நடத்த சிஎஸ்கே உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் மும்பை அணிக்கு வான்கடேவில் போட்டிகளை வைத்தால், அது மிகப்பெரிய பலமாக அந்த அணிக்கு மாறும். எனவே இதனையெல்லாம் மனதில் வைத்துதான் பிசிசிஐ இன்னும் அட்டவணையை வெளியிடாமல் உள்ளது.

Story first published: Thursday, February 24, 2022, 20:46 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+