Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மெகா ஏலம் திடீரென நிறுத்தம்.. ஹக் எட்மைட்ஸ் மயங்கியதால் பரபரப்பு.. இனி தொடர்ந்து நடக்குமா?

'பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தின் போது அதனை தொகுத்து வழங்கியவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

2022ம் ஆண்டிற்காக ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலம் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

முதற்கட்டமாக மார்க்யூ வீரர்கள் எனப்படும் அதிக மதிப்புமிக்க வீரர்களை ஐபிஎல் நிர்வாகம் முதலில் ஏலம் விடப்பட்டது.

விறுவிறுப்பான ஏலம்

விறுவிறுப்பான ஏலம்

இதில் டேவிட் வார்னர் டெல்லி அணிக்கும், டூப்ளசிஸ் ஆர்சிபி அணிக்கும், ரபாடா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் என முன்னணி வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு இடம் மாறினர். இதே போல சிஎஸ்கே அணி பட்ஜெட்டை சரியாக வைத்து குறைந்த விலையில் வீரர்களை எடுத்து வந்தது.

அதிர்ச்சி விஷயம்

அதிர்ச்சி விஷயம்

இந்நிலையில் மெகா ஏலத்தின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஏலத்தை தொகுத்து வழங்கி வந்த "ஹக் எட்மைட்ஸ்" என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இலங்கை வீரர் ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்த போதே அவர் மயங்கி விழுந்ததால் அணி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏலம் நடைபெறுமா

ஏலம் நடைபெறுமா

அவருக்கு என்ன ஆனது என்பதை பார்க்க மருத்துவக்குழு விரைந்துள்ளது. இதனையடுத்து ஐபிஎல் மெகா ஏலம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து நடைபெறுமா என்ற தகவல் விரைவில் வெளியாகலாம்.

யார் இந்த எட்மைட்ஸ்

யார் இந்த எட்மைட்ஸ்

கடந்த 36 வருடங்களாக பல்வேறு நாடுகளில் ஏலங்களை தொகுத்து வழங்கி வரும் ஹக் எட்மைட்ஸ் இதுவரை சுமார் ரூ.16 கோடிக்கு ஏலங்களை விற்று கொடுத்துள்ளார். அவரின்றி ஐபிஎல் மெகா ஏலம் தொடர்ந்து நடைபெறுமா என்பது சந்தேகமே எனத் தெரிகிறது.

Story first published: Saturday, February 12, 2022, 18:25 [IST]
Other articles published on Feb 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+