
சாம்பியன்ஸின் பரிதாபம்
வெற்றிகரமான அணிகளாக பார்க்கப்படும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாமல் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இதே போல 4 முறை சாம்பியனான சென்னை அணியும் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை மிக குறைவாக வைத்துள்ளது.

மேலும் 2 நட்சத்திர அணிகள்
2 முறை கோப்பை வென்ற கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் 8வது இடத்திலும் கடந்த 2 சீசன்களாக சிறப்பாக ஆடி வந்த டெல்லி அணி 3 வெற்றிகளுடன் 7வது இடத்திலும் இருந்து வருகின்றன. இந்த 4 அணிகளுக்கும் இனி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டாப் இடத்தில் உள்ள அணிகளின் ஃபார்ம் அது போன்று உள்ளது.

முதல் 2 இடங்கள்
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் ப்ளே ஆஃப்-க்கான இடத்தை உறுதி செய்துவிடும். இதே போல ராஜஸ்தான் அணி 6 வெற்றிகளுடன் மாறி மாறி முதலிடத்திற்கு சண்டை போட்டு வருகின்றன.

4 அணிகள் சண்டை
தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று தரமான கம்பேக் கொடுத்துள்ள ஐதராபாத் அணி 3வது இடத்திலும், 5 வெற்றிகளுடன் லக்னோ அணி 4வது இடத்திலும் சண்டையிட்டு வருகின்றனர். இவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தான் ஆர்சிபி 5வது இடத்திலும், பஞ்சாப் அணி 6வது இடத்திலும் இருந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications