Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் டிக்கெட் விற்பனை.. ரசிகர்கள் சிரமமின்றி வாங்குவதற்கான வழி.. முழு விவரம் இதோ!!

மும்பை: ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு இந்த முறை ரசிகர்களுக்கு அனுமதியளித்துள்ளது பிசிசிஐ.

Recommended Video

IPL 2022 Tickets online: Step by Step process | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 29ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மும்பை, புனே நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கு பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.

டிக்கெட் பெறுவது எப்படி

டிக்கெட் பெறுவது எப்படி

ஒவ்வொரு போட்டிக்கும் குறிப்பிட்ட நாட்கள் முன்பு டிக்கெட் விற்பனை நடைபெறும். வழக்கமாக டிக்கெட் விற்பனை நேரடியாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இரவில் இருந்தே ரசிகர்கள் வரிசையில் நிற்பதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த முறை ஆன்லைன் மூலமே பெரும்பாலும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட் பெற வழிமுறைகள்

டிக்கெட் பெற வழிமுறைகள்

டிக்கெட் பெற விரும்புவோர் முதலில் தங்களது ப்ரவுசரில் இருந்து https://www.iplt20.com/ வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள மெனு பட்டனில் Buy option என்ற தேர்வை கொடுத்தால், எந்தப் போட்டிக்கு எத்தனை டிக்கெட்டுகள் தேவை போன்ற முழு விவரங்களையும் பதிவிட்டு, பின்னர் ஆன்லைன் மூலமே பணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

 போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

மொத்தமுள்ள 70 லீக் போட்டிகளில் 20 போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 20 போட்டிகள் மும்பை DY பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் புனே எம்சிஏ சர்வதேச மைதானத்தில் 15 போட்டிகளும், மும்பை ப்ராபேர்ன் மைதானத்தில் 15 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, March 19, 2022, 11:23 [IST]
Other articles published on Mar 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+