சிஎஸ்கேவுக்கு வரும் அயர்லாந்து வீரர்.. அதுவும் ஓப்பனிங்கிற்கு.. மெகா ஏலத்திற்காக தோனி போட்ட ஸ்கெட்ச்
மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் அயர்லாந்து வீரர் ஒருவரை குறைந்த விலைக்கு வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது.
இந்த முறை மெகா ஏலத்திற்காக 600 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 378 இந்திய வீரர்களும், 222 அயல்நாட்டு வீரர்களும் உள்ளனர் .

சிஎஸ்கேவின் திட்டம்
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஓப்பனிங் வீரரை தேர்வு செய்வது தான் முதல் பணியாக உள்ளது. கடந்த சீசன் வரை ருதுராஜுடன் சேர்ந்து டூப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தார். ஆனால் மெகா ஏலத்தில் டூப்ளசிஸுக்காக கடும் போட்டி நிலவி வருவதால் பெரும் தொகை செலவாகும். எனவே அவருக்கு மாற்றாக ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோருக்கிடையே கடும் போட்டிகள் உள்ளன.

அயர்லாந்து ஓப்பனர்
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அயர்லாந்தை சேர்ந்த ஒருவரை ஓப்பனிங்கிற்கு தோனி கொண்டு வர திட்டமிட்டுள்ளார். அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் என்பவர் தான் அவர். அயர்லாந்து தேசிய அணியின் முன்னணி ஓப்பனாராக இவர் இருந்து வருகிறார். டி20 போட்டிக்களில் இவரின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக ரன் வேட்டை நடத்தி வருவதால், தோனியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

திறமைகள் என்ன
31 வயதாகும் பால் ஸ்டிர்லிங் வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். இதுவரை 264 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ட்ரிங் 6,658 ரன்களை குவித்துள்ளார். இதில் 45 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் பிட்ச்-ன் தன்மையை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப அதிரடிகளை காட்டுவார். இவர் அவ்வப்போது ஆஃப் ஸ்பின் பவுலராகவும் செயல்படுவார் என்பது சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம்.
Recommended Video

தோனி மாஸ்டர் ப்ளான்
கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக இவர் தன் பெயரை பதிவு செய்த போது, ஏலத்திற்கு தேர்வாகவில்லை. இந்த சூழலில் தற்போது ஐபிஎல் மெகா ஏலத்திற்காக ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் களமிறங்கியுள்ளார். யாருக்கும் பெரியளவில் பரிட்சையமில்லாத பால் ஸ்டிர்லிங்கை குறைந்த விலையில் ஏலம் எடுத்துக்கொள்ள தோனி திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications