Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை வீரருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு.. சிஎஸ்கேவில் மாற்றப்படும் ஃபார்முலா? இர்ஃபான் ஓபன் டாக்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேயிங் 11ல் இலங்கை வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்டதால், அனைத்து அணிகளும் ப்ளேயிங் 11- ஐ இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் சூரத்தில் பயிற்சி மேற்கொண்ட சிஎஸ்கே, தற்போது மும்பைக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

இனி அடுத்ததாக சென்னை அணியின் ப்ளேயிங் 11 என்னவென்பதை தான் தோனி தீர்மானிக்கவிருக்கிறார். தற்போது வரை ஓப்பனிங்கில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட் ஜோடி களமிறங்க, அவர்களின் பின்னர் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளன.

சிஎஸ்கேவுக்கு 2 வழிகள்

சிஎஸ்கேவுக்கு 2 வழிகள்

இந்நிலையில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷணாவும் இணைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், " சிஎஸ்கேவுக்கு 2 வழிகள் உண்டு. டெவோன் கான்வேவை ஓப்பனிங் இறக்கினால், மொயீன் அலி, பிராவோ, ஆடம் மில்னே என 4 அயல்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் காவேவை களமிறக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு இல்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

அந்த அணியில் ராபின் உத்தப்பா சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஒருவேளை உத்தப்பா - ருதுராஜ் ஓப்பனிங் ஆடினால், ஒரு அயல்நாட்டு வீரருக்கான இடம் காலியாகும். அப்போது கூடுதலாக இலங்கை வீரர் மஹீஷ் தீக்‌ஷனா சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வருண் சக்கரவர்த்தியை போன்றே மஹீஷ் தீக்‌ஷனாவும் மிஸ்ட்ரி ஸ்பின்னராக பார்க்கப்படுகிறார்.

Recommended Video

IPL 2022: Virat Kohli Speaks About His Role In RCB Team And his Mindset| Oneindia Tamil
மொத்தம் 7 பவுலர்கள்

மொத்தம் 7 பவுலர்கள்

மகாராஷ்டிரா களத்தில் வேகப்பந்துவீச்சு அதிகம் தேவைப்படும். அதற்காக தான் ஆடம் மில்னே, ராஜ்வர்தன், பிரஷாந்த் சொலாங்கி, பிராவோ என 4 வீரர்கள் உள்ளனர். பிட்ச் நிலை மாறினால் ஸ்பின்னர்களாக ஜடேஜா, தீக்‌ஷணா, மொயீன் அலி ஆகிய 3 பேரை வைத்து சமாளிக்க முடியம் என இர்ஃபான் கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கை வீரரை அணிக்குள் சேர்த்ததற்காக சிஎஸ்கேவுக்கு எதிராக குரல்கள் எழுந்தன. இதனை மனதில் வைத்து தான் தோனி முடிவெடுப்பார்.

Story first published: Tuesday, March 22, 2022, 16:39 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+