Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு புதிய பொறுப்பு.. ஆர்சிபி தந்த சுதந்திரம்.. தொலைப்பேசி உரையாடலை கூறிய இர்ஃபான் பதான்!

மும்பை: ஆர்சிபி அணியில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Recommended Video

Virat Kohli To Play In Ranji Trophy After Shows Poor Performance | Oneindia Tamil

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 நான்கு நாட்களே உள்ளன. இந்த முறை 10 அணிகளுடன் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த தொடர் நடைபெறுகிறது.

குறிப்பாக ஒரு முறையாவது கோப்பையை வென்றுவிட மாட்டார்களா என ஆர்சிபி அணி மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

விராட் கோலியின் சுதந்திரம்

விராட் கோலியின் சுதந்திரம்

விராட் கோலியின் பதவி விலகலுக்கு பிறகு தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் விராட் கோலி இனி எந்தவித அழுத்தங்களும் இன்றி, சுதந்திரமாக முழு நேர பேட்ஸ்மேனாக செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கோலியும் இதனை தான் எதிர்பார்த்தார். இந்நிலையில் அவருக்கு புதிய பொறுப்பு வந்துள்ளது.

 இர்ஃபானின் கருத்து

இர்ஃபானின் கருத்து

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், " நான் சமீபத்தில் கோலியுடன் பேசியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறிய விஷயம், இனி கேப்டன்சி விஷயத்தில் தலையிட மாட்டேன். எனது போக்கில் சுதந்திரமாக பேட்டிங் செய்வேன் என்பது தான்.

புதிய பொறுப்பு

புதிய பொறுப்பு

அதற்கென்று பேட்டிங் மட்டும் தான் எனது பணி என இருந்துவிட மாட்டேன். ஆர்சிபிக்கு புதிதாக வந்துள்ள டூப்ளசிஸுக்கு போட்டியில் இக்கட்டான சூழல்களில் ஆலோசகர் பணியை செய்வேன் என கோலி கூறியதாக இர்பான் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் திட்டம் வகுப்பது, அணியின் ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்வதில் தலையிட மாட்டார் எனவும் இர்பான் பதான் கூறினார்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

கடந்த சீசனில் ஓப்பனிங்கிற்கு களமிறங்கிய விராட் கோலி, இனி மீண்டும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கவுள்ளார். ஓப்பனிங்கில் டூப்ளசிஸ், மிடில் ஆர்டரில் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என பலமான பேட்டிங் வரிசை உள்ளது. ஆர்சிபி அணி தனது முதல் லீக் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, March 22, 2022, 16:37 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+