For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவின் பிடிவாதம்.. தள்ளிப்போகும் சச்சினின் நீண்ட நாள் ஆசை.. மும்பை அணியில் திடீர் குழப்பம்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவின் பிடிவாதத்தால் குழப்பம் நீடிக்கிறது.

ஐபிஎல் 65வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட மும்பை அணி, அடுத்தாண்டுக்காக தயாராகி வருகிறது.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எப்படியாவது முன்னேறியாக வேண்டும். இதே போல 12 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ள ஐதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றின் கடைசி வாய்ப்புகாக இன்று களமிறங்கவுள்ளது. ஒருவேளை தோற்றுவிட்டால் அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிடும்.

ரோகித் பிடிவாதம்

ரோகித் பிடிவாதம்

இப்படிப்பட்ட சூழலில் தான் ரோகித் சர்மா, மும்பை ப்ளேயிங் 11ல் முடிந்தவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். கடந்த போட்டியில் கெயீரன் பொல்லார்ட்-க்கு பதிலாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறக்கப்பட்டார். மேலும் அடுத்தடுத்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு தந்து வருகிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

இந்நிலையில் இன்று அதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. அதாவது அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை வான்கடே மைதானத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது சச்சினின் ஆசையாகும். எனவே இன்று அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு தந்து பார்க்க வேண்டும் என்ற ஆலோசனை மும்பை அணிக்குள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆனால் ரோகித் சர்மா அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் தெரிகிறது.

Recommended Video

India T20Isக்கான South Africa Squad! பல IPL Players இருக்காங்க | Aanee's Appeal | OneIndia Tamil
என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

இங்கிலாந்து தொடருக்காக ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது. எனவே அந்த இடத்திற்கு அர்ஜுன் பொருந்துவார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த சீசனில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ஆனால் இந்தாண்டு வாய்ப்புக்காக காத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 17, 2022, 14:03 [IST]
Other articles published on May 17, 2022
English summary
IPL 2022: Is Arjun tendulkar makes debut today? Confusion on MI Playing 11 decision
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+