Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செய்யக்கூடாததை செய்த தோனி.. சிஎஸ்கேவின் பிரச்சினை தான் என்ன..?? இப்படியே போனால் அவ்வளவு தான்!!

மும்பை: சென்னை அணியின் பிரச்சினைக்கு தோனி செய்யும் ஒரு தவறான விஷயம் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

CSK vs LSG போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் - Jadeja விளக்கம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கமே சென்னை அணிக்கு சோகமான ஒன்று என்று தான் கூற வேண்டும்.

கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்த முக்கிய வீரர்கள் அனைவருமே உள்ளனர். எனினும் முதல் 2 போட்டிகளில் தோல்வி.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறை. கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் சொதப்பல் மற்றும் லக்னோ அணிக்கு எதிராக பவுலிங் சொதப்பல். இதற்கு தீபக் சஹார் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் முக்கிய பிரச்சினையே தோனி தான்.

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி ஜடேஜா புதிய கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஜடேஜாவுக்கு இக்கட்டான சூழலில் உடன் இருந்து உதவ வேண்டும் என்பதற்காக தான் இந்த சீசனின் தொடக்கத்திலேயே தோனி கேப்டன் பதவியை ஒப்படைத்தார். ஆனால் இன்னும் அவர் தான் கேப்டன்சி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஒரு அணியில் ஒரு தலைமை இருந்தால் மட்டுமே சரியான வழியில் செல்ல முடியும். ஆனால் ஆட்டத்தின் சில நேரங்களில் ஜடேஜா கேப்டன்சி செய்கிறார். சில சமயங்களில் தோனி முழுவதுமாக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு ஃபீல்ட் செட்டிங் மற்றும் பவுலிங் மாற்றங்களை செய்து வருகிறார். தோனி மீது இருக்கும் நம்பிக்கையால் ஜடேஜாவும் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறார்.

நேற்றைய போட்டி

நேற்றைய போட்டி

நேற்றைய போட்டியில் கூட முதலில் ஜடேஜா தான் பவுலிங் மாற்றங்களை செய்து வந்தார். ஆனால் கடைசி 4 ஓவர்களில் தோனி, தன்னை அறியாமலேயே தான் ஒரு கேப்டன் என நினைத்து பவுலர்களை மாற்றினார். 19வது ஓவரை ஷிவம் தூபேவுக்கு கொடுத்தார். இதன் விளைவு சென்னை அணியின் வெற்றியை பறித்துவிட்டது. இதனால் தோனி இனியாவது ஜடேஜாவை கேப்டன்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.

Story first published: Friday, April 1, 2022, 14:19 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+