Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெயீரன் பொல்லார்ட் நீக்கம்? அதுவும் யாருக்காக தெரியுமா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி முடிவு!!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் கெயீரன் பொல்லார்ட்டை நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட, மும்பை அணியால் யார் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்.

 மும்பையின் போராட்டம்

மும்பையின் போராட்டம்

அந்தவகையில் கடந்த 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றி பாதையை தொடர்ந்து எப்படியாவது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முன்னேற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. இதற்காக இன்றைய போட்டியின் ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றத்தை ரோகித் கொண்டு வரவுள்ளார்.

பொல்லார்ட் நீக்கமா?

பொல்லார்ட் நீக்கமா?

அதாவது அதிரடி வீரர் கெயீரன் பொல்லார் நீக்கப்படவுள்ளதாக தெரிகிறது. நடப்பு சீசனில் பொல்லார்ட் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 10 போட்டிகளில் 129 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவர் மட்டும் ஃபார்மில் இருந்திருந்தால் பல போட்டிகளில் வென்றிருக்கலாம். இதனால் அவரின் இடத்தில் வேறு சில வீரர்களுக்கு வாய்ப்பு தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சச்சின் மகனுக்கு வாய்ப்பு

சச்சின் மகனுக்கு வாய்ப்பு

அந்தவகையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தான் களமிறங்கவுள்ளார். இடதுகை ஆல்ரவுண்டரான அர்ஜுன், கடந்தாண்டு முதல் வாய்ப்புகாக காத்துள்ளார். எனினும் அவர் உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் குறைவு என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று களம் காணுகிறார்.

மும்பை அணி

மும்பை அணி

ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், முருகன் அஸ்வின், குமார் கார்த்திகேயா, பும்ரா, ரிலே மெரிடித்

Story first published: Monday, May 9, 2022, 18:44 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+