விராட் கோலி தான் ஆர்சிபி கேப்டன்?.. வெளியான புகைப்பட ஆதாரங்கள்.. திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?
பெங்களூரு: ஆர்சிபி அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலியே தான் இருப்பார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி மும்பை வான்கடேவில் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 29ல் நடைபெறுகிறது.
இதற்கான முழு அட்டவணையும் சமீபத்தில் வெளியான நிலையில், அனைத்து அணிகளும் கடைசிகட்ட பணிகளில் இறங்கிவிட்டன.

ஆர்சிபி அணி கேப்டன்
ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. விராட் கோலிக்கு அடுத்ததாக தினேஷ் கார்த்திக், டூப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல் என 3 வீரர்கள் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு நீண்ட ஆலோசனைகள் நடந்தன. இதன் இறுதி முடிவை வரும் மார்ச் 12ம் தேதி பிரமாண்டமாக ஆர்சிபி வெளியிடுகிறது.

ஆர்சிபியின் ட்வீட்
பெங்களூருவில் இதற்காக விழாவே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேப்டனின் உருவ கட்டவுட்டையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கேப்டன் யாராக இருக்கும் என நினைக்கிறீர்கள் என க்ளூ கொடுத்துள்ளது. இதில் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என வல்லுநர்கள் உறுதியாக தெரிவித்தனர். இந்நிலையில் அதில் சந்தேகம் நிலவுகிறது.

ஆதாரங்கள் இதோ
ஆர்சிபி வெளியிட்டுள்ள கட் அவுட்களின் உருவம், விராட் கோலியின் உருவமாகும். இதற்கான ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. அதாவது அணியின் ஃபோட்டோஷூட்களின் போது விராட் கோலி ஆர்சிபி ஜெர்ஸியில் போஸ் கொடுத்திருப்பார். அதனை தான் தற்போது கேப்டன் அறிவிப்புக்கு பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விராட் கோலி தான் மீண்டும் கேப்டனாக பதவியேற்கிறார் என இரு புகைப்படங்களையும் குறிப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.
Recommended Video

வாய்ப்புகள் உள்ளதா?
விராட் கோலியே மீண்டும் கேப்டனாக வேண்டும் என்பது தான் அணி நிர்வாகம் மற்றும் வல்லுநர்களின் யோசனையாகவும் உள்ளது. முன்பை விட அணியின் பேட்டிங், பவுலிங் என பலம் கூடியிருப்பதால், அவர் துணிந்து களமிறங்கலாம். மேலும் ஆலோசகராக டிவில்லியர்ஸ் களமிறங்குகிறார். பக்கபலமாய் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் என்பதால் விராட் கோலி மீண்டும் தனது கேப்டன்சி பயணத்தை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications