இஷாந்த் சர்மாவுக்கா இந்த நிலைமை.. ஐபிஎல் -ன் போது செய்த விஷயம்.. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
மும்பை: இந்திய கிரிக்கெட்டில் கலக்கி வந்த முன்னணி வீரர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற முன்னணி அணிகள் முதல் போட்டியிலேயே தோற்றது, தோனியின் அரைசதம் என பல திருப்புமுணைகளுடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதிர்ச்சி நிகழ்வு
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஒவ்வொரு போட்டியின் போதும் குறிப்பிட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் மட்டும் "விர்ச்சூவல் பாக்ஸில்" மைதானத்தில் உள்ள ஒளித்திரை மூலம் போட்டியை காண்பார்கள். அந்தவகையில் நேற்றைய போட்டியில் திடீரென முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தோன்றினார்.

பரிதாபமான நிலை
இந்தியாவின் டெஸ்ட் அணி மற்றும் ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமான பவுலராக இருந்து வந்த இஷாந்த் சர்மாவை இந்தாண்டு மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுக்கொள்ளவில்லை. இந்திய அணியிலும் தற்போது அவருக்கான வாய்ப்புகள் பெரியளவில் இல்லை. இதனால் தற்போது இதுபோன்ற விளம்பர நிறுவனங்களுக்காக களமிறங்கிவிட்டார்.

பொய்யான சிரிப்பு
பண வர்த்தனை நிறுவனமான " Rupay" வின் ஜெர்ஸியை அணிந்துக்கொண்டே ஏதேனும் ஒரு அணிக்கு பொய்யாக உற்சாகப்படுத்துவது போன்று இருந்தார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு அவருக்கு இந்த நிலைமையா வர வேண்டும் என சங்கடமான முகத்துடன் பார்த்தனர். இந்த ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மாவை போன்று சுரேஷ் ரெய்னா, ஸ்மித் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

போட்டியின் முடிவு என்ன
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்பின்னர் விளையாடிய ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications