Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்கதான் கேப்டன்.. தோனிக்காக களத்திலேயே ஜடேஜா செய்த விஷயம்.. உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்- வீடியோ

மும்பை: சென்னை அணி வெற்றி பெற்றவுடன் தோனிக்காக ஜடேஜா செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி வெற்றி

சென்னை அணி வெற்றி

மும்பை அணி நிர்ணயித்த 156 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் சிஎஸ்கே தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் சொதப்பி விட, ராபின் உத்தப்பா 30 ரன்களும், அம்பத்தி ராயுடு 40 ரன்களும் எடுத்து நம்பிக்கை கொடுத்தனர். இறுதியில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட, தோனி கைக்கொடுத்து உதவினார்.

கடைசி ஓவர் பேட்டிங்

கடைசி ஓவர் பேட்டிங்

உனத்கட் வீசிய பவுலிங்கில் கடைசி 4 பந்துகளில் 6, 4, 2, 4 என அடுத்தடுத்து ரன் விளாச, சிஎஸ்கே த்ரில் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தோனி என்றுமே ஃபினிஷர் தான், ஒன்மேன் ஆர்மி என ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதற்கேற்றார் போல ஜடேஜாவும் ஒரு ரசிகராகவே மாறிவிட்டார்.

ஜடேஜா செயல்

ஜடேஜா செயல்

போட்டி முடிந்த பின்னர் நேரடியாக களத்திற்கு வந்த ஜடேஜா, தோனியின் முன் குணிந்து, நீங்கள் தான் ஜாம்பவான், நீங்கள் தான் கேப்டன் என்பது போன்று மரியாதை செலுத்தினார். ஒரு அணியின் கேப்டன் என்றும் இல்லாமல், ரசிகராகவே மாறி தோனியிடம் அவர் கொடுத்த மரியாதையான விடீயோ இணையத்தில் பரவி வருகிறது.

நெகிழ்ச்சி பேச்சு

தொடர்ந்து பேசிய ஜடேஜா, "போட்டி மிகவும் பரபரப்பாக சென்றதால், நாங்கள் டென்சனில் இருந்தோம். இருப்பினும் அந்த இக்கட்டான சூழலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.இதற்கு காரணம் தோனி என்ற நபர் களத்தில் அவுட்டாகாமல் இருந்தது தான். இறுதியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டார். முகேஷ் சௌத்ரியும் பவர் ப்ளேவில் 2 விக்கெட்களை எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறினார்.

Story first published: Friday, April 22, 2022, 11:46 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+