இதை எதிர்ப்பார்க்கலையே.. அறிமுகமாகும் டெஸ்ட் வீரர்.. லக்னோவை எதிர்கொள்ள ஹர்திக் பலே ப்ளான்!
மும்பை: லக்னோ அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யா அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் இன்று குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி புனேவில் நடைபெறுகிறது.
ப்ளே சுற்றுக்கு முதலாவதாக செல்லவுள்ள அணி எது என்பதை தீர்மானிக்கக்கூடிய போட்டி இதுவே ஆகும்.

முக்கியமான போட்டி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் இரு அணிகளுமே இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் லக்னோ முதலிடத்தில் உள்ளனர். எனவே இன்று வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் இடத்தை உறுதி செய்யும். ஆனால் இதில் லக்னோவுக்கு தான் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சிக்கலில் குஜராத் அணி
லக்னோ அணி கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று நம்பிக்கையுடன் உள்ளது. அனைத்து வீரர்களும் ஃபார்மில் உள்ளனர். ஆனால் நன்றாக இருந்த குஜராத் அணி கடந்த 2 போட்டிகளாக மோசமாக சொதப்பியுள்ளது. ஓப்பனிங்கை தவிர்த்து மற்ற அனைவரும் சொதப்புகின்றனர்.

முக்கிய வீரர்கள் வருகை
இந்நிலையில் அவற்றை சரிசெய்ய ஒட்டுமொத்த திட்டத்தையும் கேப்டன் பாண்ட்யா மாற்றியுள்ளார். அதாவது ஜெயந்த் யாதவ் இன்று அறிமுகமாகவுள்ளார். சாய் சுதர்ஷனுக்கு பதிலாக கொண்டு வருகின்றனர். இதே போல யாஷ் தயாலும் மீண்டும் அணிக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இவர்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் இன்றைய ஆடுகளம் தான்.

மைதானத்தில் உள்ள ட்விஸ்ட்
போட்டி நடைபெறும் புனே மைதானம் ஸ்பின்னர்களுக்கு தான் அதிகளவில் உதவுகிறது. குஜராத் அணி ரஷித் கான் எனும் ஒரே ஒரு முன்னணி ஸ்பின்னரை நம்பியே இருந்தது. எனவே அதற்காக ஜெயந்த் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளார். ரஷித் கான் ஃப்ரிஸ்ட் ஸ்பின், ஜெயந்த் யாதவ் ஆஃப் ஸ்பின் என காம்போவாக இருக்கும். இதே போல ஜெயந்த் யாதவ் பேட்டிங்கிலும் நிலைத்து நின்று ஆடக்கூடியவர். சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்க உதவுவார்.


Click it and Unblock the Notifications