For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே தொட முடியாத கோலி சாதனை.. அசால்ட்டாக சமன் செய்த பட்லர்.. முறியடிக்க செம வாய்ப்பு

அகமதாபாத்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

Recommended Video

Rr vs RCB Jos Buttler ருத்ர தாண்டவம்! RCB தோற்றது எப்படி? | #Cricket

223 போட்டியில் விளையாடியுள்ள விராட் கோலி, 6624 ரன்களை விளாசியுள்ளார். பந்துவீச்சில் 4 விக்கெட்டையும் எடுத்து இருக்கிறார்.

ஆனால் நடப்பு சீசனில் விராட் கோலி 3 கோல்டன் டக் அவுட்டாகி, 341 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

விராட் இமாலய சாதனை

விராட் இமாலய சாதனை

இதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆனால் இதே விராட் கோலி 2016ஆம் ஆண்டு ஒரு மகத்தான சாதனையை செய்தார். அந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, 16 போட்டியில் 973 ரன்கள் விளாசினார். இதில் 7 அரைசதமும், 4 சதங்களும் அடங்கும்.

பட்லர் சாதனை

பட்லர் சாதனை

விராட் கோலியின் இந்த சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது என்று ரசிகர்கள் மார்தட்டி வந்தனர். ஆனால், தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் பட்லர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடப்பு சீசனில் 16 போட்டியில் விளையாடியுள்ள ஜாஸ் பட்லர் 824 ரன்களை குவித்துள்ளார்.

முறியடிக்க வாய்ப்பு

முறியடிக்க வாய்ப்பு

இதன் மூலம் ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசி, விராட் கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்துள்ளார். இந்த நிலையில், பட்லருக்கு இறுதிப் போட்டியில் களமிறங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பட்லர் ஒரு சதம் அடித்தால், ஒரே சீசனில் அதிக சதம் விளாசிய ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைப்பார்.

வார்னர் ரெக்காடுக்கு ஆபத்து

வார்னர் ரெக்காடுக்கு ஆபத்து

எனினும் விராட் கோலியின் ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த சாதனையை உடைப்பது ஜாஸ் பட்லருக்கு அவ்வளவு எளிதல்ல. எனெனில் பட்லர் மேலும் 149 ரன்கள் அடித்தால் மட்டுமே இந்த சாதனையை தகர்க்க முடியும். வேண்டும் என்றால் ஒரே சீசனில் 2வது அதிகபட்ச ரன்கள் அடித்த டேவிட் வார்னர் (848 ரன்கள்) என்ற சாதனையை பட்லர் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, May 28, 2022, 14:34 [IST]
Other articles published on May 28, 2022
English summary
IPL 2022 – Jos Buttler Equals virat kohli record for most centuries in a season யாருமே தொட முடியாத கோலி சாதனை.. அசால்ட்டாக சமன் செய்த பட்லர்.. முறியடிக்க செம வாய்ப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+