Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது ஐபிஎல் சதம் விளாசிய ஜாஸ் பட்லர்… விழி பிதுங்கிய ரோகித் சர்மா.. பந்தால் தாக்கியதற்கு பதிலடி

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் சதம் விளாசினார்.

மும்பை அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியுள்ளது.

மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்திலும் இல்லை.

பந்துவீச்சு

பந்துவீச்சு

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே பட்லர் அடித்தார். இதனையடுத்து சாம்ஸ் 2வது ஓவரை வீசினார். அதில் 2வது பந்தில் சாம்ஸ் வீசிய பந்து பட்லரின் விலா எலும்பை பதம் பார்த்தது. இதனால் பட்லர் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், இது அவரை கோபப்படுத்தியது.

பதிலடி

பதிலடி

இதனையடுத்து சாம்ஸ் வீசிய 3வது பந்தை பட்லர் சிக்ஸ்க்கு விரட்டி தக்க பதிலடி தந்தார்..அதன் பிறகு பாசில் தம்பி வீசிய 4வது ஓவரில் பட்லர் ருத்ரதாண்டவம் ஆடினார். முதல் பந்து மட்டும் தான் ரன் போகவில்லை. 2வது பந்தில் பவுண்டரி விளாசிய பட்லர், மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ஜாஸ் பட்லர் தொடர்ந்து 2 சிக்சர் விளாச,5 வது பந்தில் ஒரு பவுண்டரியும், 6வது பந்தில் சிக்சரும் என மொத்தம் 26 ரன்களை பட்லர் விளாசினார்.

மும்பைக்கு எதிராக பட்லர்

மும்பைக்கு எதிராக பட்லர்

தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அப்போதே 4 சிக்சர், 5 பவுண்டரிகளை பட்லர் அடித்திருந்தார். இதில் ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரம் சென்றது. இதன் மூலம் ஜாஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக மட்டும் பட்லர் 350 ரன்கள் கடந்தார். அவரது சராசரி 90-ஐ நெருங்கியது.

Recommended Video

IPL 2022 : Rohit Sharma gives witty response on 'home advantage' accusation | Oneindia Tamil
2வது சதம்

2வது சதம்

ஜாஸ் பட்லர் அடுத்த 34 பந்துகளில் மேலும் 50 ரன்கள் விளாசினார். இதனால் 66 பந்துகளில் சதம் விளாசிய பட்லர் மொத்தம் 11 பவுண்டரிகள், 5 சிக்சர்களை எடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் பட்லர் விளாசியுள்ள 2வது சதமாகும். 99 ரன் எடுத்து சிங்கிள்ஸ் ஓடிய போது மும்பை அணி எல்பிடபிள்யூவிற்கு டிஆர்எஸ் முடிவு கேட்டது. ஆனால் அது அவுட் இல்லை என தெரியவந்தது. அதன் பிறகே தனது சதத்தை பட்லர் கொண்டாடினார் அதன் பிறகு பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் அடுத்த 34 பந்துகளில் மேலும் 50 ரன்கள் விளாசினார். இதனால் 66 பந்துகளில் சதம் விளாசிய பட்லர் மொத்தம் 11 பவுண்டரிகள், 5 சிக்சர் எடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் பட்லர் விளாசியுள்ள 2வது சதமாகும். 99 ரன் எடுத்து சிங்கிள்ஸ் ஓடிய போது மும்பை அணி எல்பிடபிள்யூவிற்கு டிஆர்எஸ் முடிவு கேட்டது. ஆனால் அது அவுட் இல்லை என தெரியவந்தது. அதன் பிறகே தனது சதத்தை பட்லர் கொண்டாடினர் அதன் பிறகு பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Story first published: Saturday, April 2, 2022, 19:54 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+