Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முடிஞ்சா எங்க தல கிட்ட மோதி பாருங்க”.. பட்லர் vs பும்ரா.. ஐபிஎல் தொடரில் ஒரு பீஸ்ட் சண்டை - விவரம்!

மும்பை: ஜாஸ் பட்லர் மற்றும் பும்ராவுக்கும் இடையேயான மோதல் ரசிகர்களிடையே தனி கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அட்டகாசமான பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 193 ரன்களை குவித்தது.

பட்லரின் மிரட்டல் ஆட்டம்

பட்லரின் மிரட்டல் ஆட்டம்

ராஜஸ்தான் அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் தான் காரணம். 68 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 100 ரன்களை விளாசித்தள்ளினார். பட்லருக்கும் - மும்பை அணிக்கு எப்போதுமே ஒரு போர் இருந்துதான் வந்துள்ளது. இதற்கு பழைய ரெக்கார்ட்களை உதாரணமாக கூறலாம்.

ரெக்கார்ட்கள்

ரெக்கார்ட்கள்

மும்பை அணிக்கு எதிராக ஜாஸ் பட்லரின் கடைசி 5 இன்னிங்ஸ்களில் அடித்த ஸ்கோர்கள் பின் வருமாறு, 94* (53) | 89 (43) | 70 (44) | 41 (32) | 100 (68) ஆகும். ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக அவரின் சராசரி ரன் விகிதம் 80 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 161.29 ஆகும்.

யார் அந்த பவுலர்

யார் அந்த பவுலர்

ஆனால் ஒரு வீரரிடம் மட்டும் பட்லரின் பாட்ஷா பழிக்கவில்லை. அவர் தான் ஜஸ்பிரித் பும்ரா. இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை மீண்டு வர பும்ரா தான் காரணம். அதிரடி காட்டிய பட்லருக்கு எதிராக அவர் 15 பந்துகளை வீசினார். அதில் அடிக்கப்பட்ட 0,0,4,0,0,0,0,0,1,4,0,1,1,0,W மட்டுமே ஆகும்.

 என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

பல பவுலர்களுக்கு ஜாஸ் பட்லர் தலைவலி கொடுத்த போதும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை இறுதியில் விக்கெட்டை பறிகொடுத்து சரணடைந்துவிட்டார். இதனால் ஆட்டத்தை விட, இவர்களின் மோதலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Saturday, April 2, 2022, 18:42 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+