ஆர்சிபியை இனி தடுப்பது சிரமம்.. பயிற்சியை தொடங்கிய 2 அதிவேக புயல்கள்.. ஹர்ஷல் பட்டேலுக்கு மாற்று!!
மும்பை: ஆர்சிபி அணியை இனி எந்த அணியாலும் வெல்ல முடியாது என்பது போல புதிதாக அசுர பலம் கிடைத்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக படு சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது.
இந்த முறை ஃபாப் டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆர்சிபிக்கு பின்னடைவு
முதல் போட்டியில் மட்டும் தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்து தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் டூப்ளசிஸ், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் கலக்கி வந்த நிலையில் மேக்ஸ்வெல்லும் கடந்த போட்டியில் இணைந்தார். ஆனால் பந்துவீச்சில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது.

ஹர்ஷலின் விலகல்
ஆர்சிபி அணியின் முன்னணி பவுலராக உள்ள ஹர்ஷல் பட்டேலின் சகோதரி காலமானார். இந்த துக்க செய்தியால் மனமுடைந்த அவர், அணியின் பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளார். சிறிது நாட்களில் மீண்டும் அணியுடன் இணைந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் வரும் வரை டெத் ஓவர்களில் யார் வீசுவார்கள் என்ற குழப்பம் இருந்தது.

அசுர பலம்
இந்நிலையில் அதற்கு தற்போது பிரச்சினையே இல்லை. குவாரண்டைனில் இருந்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஸ் ஹாசல்வுட் மற்றும் ஜேசன் பெக்ரெண்டோர்ஃப் ஆகியோர் தங்களது பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். இவர்கள் இருவரில் இருந்து யாரேனும் ஒருவர் ஹர்ஷலுக்கு மாற்றாக அறிவிக்கப்படுவார்கள்.

பலம் என்ன
ஜோஸ் ஹாசல்வுட் டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்தவர். கடந்த சீசன் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தார். பெக்ரெண்டோர்ஃப் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். ஹாசல்வுட் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடியவர். ஐபிஎல்-ல் இதுவரை 12 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பெக்ரெண்டோர்ஃப் 5 போட்டிகளில் ஆடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications