Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாட் கம்மின்ஸ்க்காக ஜூஹி சாவ்லா மகள் போட்ட பதிவு.. இதயத்தை திருப்பி தாருங்கள்.. என்ன நடக்குது?

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது கேகேஆர் அணியுடன் அமர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் ஜான்வி மேஹ்தா.

இவர் வேறு யாரும் இல்லை. கேகேஆர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜூஹி சாவ்லாவின் மகள். மெகா ஏலத்தின் போதே ஜான்வி மேஹ்தா குறித்து நெட்டிசன்கள் தேடினர்.

ஆனால் ஜான்வி மேஹ்தாவோ பிரபல ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்சின் தீவிர ரசிகையாக மாறிவிட்டார்.

பாலிவுட் வாய்ப்பு

பாலிவுட் வாய்ப்பு

22 வயதான ஜான்வி, 4 ஆண்டுகளுக்கு முன்பே ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று, இளம் வயதில் ஏலத்தில் பங்கேற்ற நபர் என்ற பெருமையை பெற்றார். படிப்பில் சுட்டியான ஜான்வி மேஹ்தா, இங்கிலாந்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அழகிய தோற்றத்தில் பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருப்பதால் ஜான்விக்கு பாலிவுட், கோலிவுட் என வாய்ப்பு கொட்டியது.

தந்தை தொழில்

தந்தை தொழில்

ஆனால் அவர், அதற்கு அனைத்திற்கும் நோ சொல்லிவிட்டு தற்போது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். மேலும் கேகேஆர் அணியில் ஜூஹி சாவ்லாவும் ஒரு உரிமையாளர் உன்பதால், தற்போது அதன் வேலையையும் ஜான்வி கவனித்து வருகிறார். ஜான்வி தந்தையான தொழில் அதிபர் ஜே மேத்தாவுக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருந்தார். (யாஷ் பிர்லாவின் தங்கை)

பாட் கம்மின்ஸ் ரசிகை

பாட் கம்மின்ஸ் ரசிகை

ஆனால் அவர் ஒரு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து ஜூஹி சாவ்லாவை 2ஆம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பிறந்த பிள்ளை தான் ஜான்வி. ஜான்வி பின்னால் ஊரே சுற்றினாலும், அவர் கண்கள் தற்போது பாட் கம்மின்ஸ் மீது தான் உள்ளது. பாட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததை மைதானத்தில் ஜான்வியும் கண்டு களித்தார்.

திருப்பி கொடுங்கள்

திருப்பி கொடுங்கள்

அப்போது கேகேஆர் அணியிடம் பேசிய அவர், என் வாழ்நாளில் இப்படி ஒரு ஆட்டத்தை பார்த்தது இல்லை. என்னால் இன்று முழுவதும் பேச முடியுமா என்று தெரியவில்லை. வாய் அடைத்து நிற்கின்றேன். என்னுடைய இதயத்தை காணும். கொல்கத்தா அணி எனக்கு மாற்று இதயத்தை தர வேண்டும் என கேட்டுகொண்டார். இதை பார்த்தும் ஜான்வி, பாட் கம்மின்ஸ்க்கு கோட் வெர்டில் ஏதோ சொல்கிறார் போல என்று கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

Story first published: Friday, April 8, 2022, 18:19 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+