For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நடுவர் தந்த மோசமான தீர்ப்பு..” தலைகீழாக மாறிய ஆட்டத்தின் முடிவு.. அதிருப்தியில் காவ்யா மாறன்!!

புனே: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுவும் கேன் வில்லியம்சனால் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசினார்.

முதல் விக்கெட் சர்ச்சை

முதல் விக்கெட் சர்ச்சை

இமாலய இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களுக்கும், அபிசேஷ் சர்மா 9 ரன்களுக்கும் நடையைக்கட்டனர். அவர்களின் பின்னர் வந்த ராகுல் திரிபாதி மற்றும் நிகோலஸ் பூரண் இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். இதில் வில்லியம்சனின் விக்கெட்டை தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 மிஸ்ஸான கேட்ச்

மிஸ்ஸான கேட்ச்

ஆட்டத்தின் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை வில்லியம்சன் தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் சற்று பவுன்சானதால் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பிங்கில் நின்றிருந்த சஞ்சு சாம்சன் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார். எனினும் வேகத்தில் பந்து, கை நழுவியது.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

சஞ்சு சாம்சனின் கைகளில் பட்டு எகிறிய பந்தை, ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த தேவ்தத் பட்டிக்கல் டைவ் அடித்து பிடித்தார். இது வழக்கமாக அனைவரும் செய்வது தான். ஆனால் பந்து முதலில் தரையில் பட்ட பின்பு தான் பட்டிக்கல் பிடித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. வீடியோவை சூம் செய்து பார்த்த போதும், பந்து முதலில் தரையில் பட்டது போன்றே இருந்தது.

Recommended Video

SRH vs RR : Washington Sundar departs after a fine knock of 40 off 14 deliveries | Oneindia Tamil
 சர்ச்சை முடிவு

சர்ச்சை முடிவு

பல ஆங்கிளில் வீடியோவை பார்த்த 3வது நடுவர், அவுட் கொடுப்பதாக அறிவித்தார். இது ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது. ஒரு அணியில் வில்லியம்சன் போன்ற கேப்டனின் விக்கெட் மிக முக்கியமானது. ஆனால் அதனை நன்கு ஆராயாமல் 3வது நடுவர் செய்தது பெரும் தவறு என ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். வில்லியம்சனுக்கு பிறகு வந்த எந்த வீரரும் சரியாக சோபிக்காததால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Story first published: Wednesday, March 30, 2022, 10:11 [IST]
Other articles published on Mar 30, 2022
English summary
IPL 2022: Kane Williamson wicket creates a controversy, Fans dissappointed with Sanju Samson, Devdutt Padikkal duo Catch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+