Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராக்கி பாய் Vs விராட் கோலி பாய்.. கேஜிஎஃப் 2 படக்குழு அளித்த ஸ்விட் சர்பரைஸ்.. செம ஐடியா

புனே: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ஆர்சிபி அணி 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக தனி ஆளாக பல வெற்றியை குவித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆர்சிபி அணி நிர்வாகமும், கே.ஜி.எஃப் திரைப்பட நிறுவனமும், ஆர்சிபி வீரர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

கேஜிஎஃப் 2 சாதனை

கேஜிஎஃப் 2 சாதனை

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த கேஜிஎஃப் 2 திரைப்படம், இதுவரை 300 கோடி ருபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா, ஆந்திரா, வட இந்தியாவிலும் வசூலில் பல்வேறு சாதனைகளை கேஜிஎஃப் 2 படைத்து வருகிறது.

புதிய முடிவு

புதிய முடிவு

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் வெளியே செல்ல முடியாது என்பதால், கிரிக்கெட் வீரர்கள் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் திரைப்படத்தை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆர்சிபி நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

வீரர்கள் மகிழ்ச்சி

வீரர்கள் மகிழ்ச்சி

அதன்படி, கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஹோட்டல் லாபியில் திறந்தவெளியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அதிநவீன ஒலி, ஒளி வசதியுடன் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தை ஆர்சிபி வீரர்களுக்கு திரையிட்டனர். இந்தப் படத்தை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் பார்த்து ரசித்தனர்.

ஹோட்டலுக்கு வந்த தியேட்டர்

ஹோட்டலுக்கு வந்த தியேட்டர்

2 மாதங்களுக்கு மேல் பயோ பபுளில் வீரர்கள் இருப்பதால் மனது தொய்வு அடையும் என்பதால், தியேட்டரையே , ஹோட்டலுக்கு கொண்டு வந்து ஆர்சிபி அணி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. ஆர்சிபி அணியை போல் இனி மற்ற அணிகளும் கேஜிஃஎப் 2 படத்தை வீரர்களுக்கு காட்ட முடிவு எடுத்துள்ளது.

Story first published: Sunday, April 17, 2022, 22:35 [IST]
Other articles published on Apr 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+