
பலமான அணிகள்
5 முறை சாம்பியனான மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இல்லாதது குறையாக பார்க்கப்படுகிறது. எனினும் பல திறமையான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளதால் அந்த அணியும் இம்முறை கோப்பைக்கான பந்தயத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கேவும் இம்முறை பலமாக உள்ளது. எனினும் தோனி கேப்டன் பதவியை விட்டு சென்றது பின்னடைவாக கருதப்படுகிறது.

இம்முறை யாருக்கு
இதே போன்று பெங்களுரு அணியின் கேப்டனாக விராட் கோலி ராஜினாமா செய்துள்ள நிலையில், டுபிளஸிஸ் ஆர்சிபி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மெக்ஸ்வெல் திருமணம் காரணமாக முதல் சில போட்டியில் பங்கேற்க மாட்டார். கொல்கத்தா அணியும் புத்தம் புதிய தோற்றத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடுகிறது

புதிய அணிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிம் பட்லர், அஸ்வின், சாஹல் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் ஏலத்தில் தங்களது அணியை பெருமளவு புதிய வீரர்களை வைத்து தயார் செய்துள்ளனர். அனைவரின் எதிர்பார்ப்பும் புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மேல் உள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோவும், ஹர்திக் தலைமையிலான குஜராத் அணியும் இம்முறை பழைய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம்.
Recommended Video

இன்றைய போட்டி
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் கடந்த முறை இறுதிச் சுற்றில் மோதிய சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரஸில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயரை கட்டுப்படுத்துவதே சிஎஸ்கே அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். கேப்டனாக முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் ஜடேஜா களமிறங்குகிறார். ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு எண்டர்டைமண்ட் உறுதி.


Click it and Unblock the Notifications