
தொடக்க வீரர்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், இன்றைய ஆட்டத்தில் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டார். மறுமுனையில் நின்ற ரஹானேவும் சொற்ப ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

ஸ்ரேயாஸ் ஆட்டமிழப்பு
இதனைத் தொடர்ந்து செம ஃபார்மில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இன்று ஸ்பெஷல் ஷோ போடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் அவர் 13 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஹசரங்கா பந்துவீச்சில் நடையை கட்டினார். விக்கெட் வீழ்கிறது என தெரிந்தும் அதிரடியாக ஆட முற்பட்ட நிதிஷ்ரானா 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஹசரங்கா வேட்டை
2017ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களுக்கு முன்பு ஆர்சிபி அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரைசதம் விளாசிய சுனில் நரைன், இம்முறை காப்பாற்றுவார் என கேகேஆர் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு தகுந்தார் போல் பவுண்டரி, சிக்ஸ் என இன்னிங்சை சுனில் நரைன் தொடங்கியதும் கேகேஆர் ரசிகர்கள் கொஞ்சம் தெம்பாக உட்கார, அடுத்த சில பந்துகளில் அவரது விக்கெட்டையும் ஹசரங்கா வீழ்த்தினார்.

தடுமாற்றம்
தோனியை போல விக்கெட் கீப்பிங் செய்து பிரபலமான ஷெல்டன் ஜாக்சன், அவரை போலவே பேட்டிங் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,அவர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார். இறுதியில் கொஞ்சம் ரஸில் அதிரடி காட்ட, அவரையும் 25 ரன்களில் ஆர்சிபி வீரர்கள் தட்டி தூக்கினர். இறுதியில் கேகேஆர் அணி 18.5வது ஓவரில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


Click it and Unblock the Notifications











