Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - மோசமான தோல்வியை தழுவிய சிஎஸ்கே.. பழி தீர்த்த கொல்கத்தா அணி.. ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.

Recommended Video

IPL 2022 :Kolkata Knight Riders Beat Chennai Super Kings By 6 Wickets | Oneindia Tamil

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸை இழந்த சிஎஸ்கே அணி, முதலில் பேட்டிங் செய்தது.

இதனையடுத்து பெரிய இலக்கை அடிக்க வேண்டும் என்ற நோக்கில் சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தனர்.

மோசமான ஓப்பனிங்

மோசமான ஓப்பனிங்

ஓப்பனிங்கிற்கு களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் டெவோன் கான்வே ஜோடி முதல் ஓவருக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை. ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட்டும், டெவோன் கான்வே 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து விகெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இருவருமே உமேஷ் யாதவின் பவுலிங்கில் சிக்கினர்.உத்தப்பா 28 ரன்களுக்கும், அம்பத்தி ராயுடு 15 ரன்களுக்கும் வெளியேறினர். பின்னர் வந்த ஷிவம் தூபே 3 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது.

தோனி அதிரடி

தோனி அதிரடி

இதனையடுத்து பெரும் வரவேற்புக்கு இடையே மைதானத்துக்கு வந்த தோனி, தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினார். அவருக்கு நரைன் நெருக்கடி தர, அப்போது பொருமை காட்டிய தோனி, பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 1 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாச தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் தோனி அரைசதம் குவித்தார். ஜடேஜா 26 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் எடுத்தது.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, நிதிஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே தமது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

ரஹானே 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். சாம் பில்லிங்ஸ், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி எந்த சிக்கலும் இல்லாமல் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு கொல்கத்தா வெற்றியை 18 புள்ளி 3வது ஓவரில் வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்காவின் சாதனையை சமன் செய்தார்.

Story first published: Saturday, March 26, 2022, 23:20 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+