Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன்ஷியில் தோனியை மிஞ்சிய ஸ்ரேயாஸ்.. முதலில் ராக்கெட் இறுதியில் புஸ்வானம்.. பஞ்சாப் சோகம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக செயல்பட்டார்.

இதுவரை 7 ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று 2வது பேட்டிங் செய்யும் அணியே 6 முறையும் வென்றது. இதனால் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் அடித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

கேகேஆர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார். 1 ரன்னில் மாயங் அகர்வால் இருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். அதன் பிறகு களமிறங்கிய ராஜபக்சே அதிரடியை காட்டினார். சிக்சர், பவுண்டரி என அடித்து கொல்கத்தா வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். 9 பந்தை எதிர்கொண்ட அவர் 31 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

இருப்பினும் ராஜபக்சே 31 ரன்னில் சிவம் மவி பந்தில் ஆட்டமிழக்க, பொறமையாக விளையாடிய ணிகர் தவானும் நடையை காட்டினார். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 62 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட் பறிப்போனாலும், பஞ்சாப் அணியின் நடுவரிசை வீரர்கள் கொஞ்சம் பெரிய ஷாட்களை ஆடாமல் ரன் சேர்த்து இருக்கலாம்.

ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி

ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி

ஆனால் அவர்கள் பீஸ்ட் மோடில் இருந்தனர். இதனால் பெரிய ஷாட்களை அடிக்கும் முனைப்பில் வீரர்கள் இருக்கும் போது பார்ட் டைம் வீரர்களை பந்துவீச அழைத்தால் சரி வராது என்பதை உணர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி பந்துவீச்சாளர்களை வைத்தே ஓவர்களை நகர்த்தினார். ஸ்ரேயாஸ் விரித்த வலையில் விசமாக சிக்கியது பஞ்சாப் அணி. அனுபவ வீரர்களின் ஓவர்களை அமைதியாக விளையாடி விட்டு, பின்னர் புதுமுகம் வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இருக்கலாம்.

137 ரன்களுக்கு சுருண்டது

137 ரன்களுக்கு சுருண்டது

ஆனால் பஞ்சாப் அணி வீரர்களோ, நரைன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ் ஓவர்களை அடித்து ஆடவே முற்பட்டனர். இதனால் லிவிங்ஸ்டோன், ராஜ் பவா, ஷாரூக்கான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 102 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது. இறுதியில் ரபாடா மட்டும் 25 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 10 பந்துகள் எஞசிய நிலையில் 137 ரன்களுக்கு சுருண்டது. கொல்கத்தா அணியின் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் பர்பிள் கேப்பை உமேஷ் யாதவ் பெற்றார்.

Story first published: Friday, April 1, 2022, 21:31 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+