சிஎஸ்கேவுக்கு விரித்த வலை.. கம்பீர் போல் கலக்கிய ஸ்ரேயாஸ்.. இந்தியாவின் எதிர்கால கேப்டன் ரெடி
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் கடந்த சீசன் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது.
கொல்கத்தா அணியை விட, சிஎஸ்கே அணி தான் பலமான அணியாக விளங்கியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயரின் நேர்த்தியான கேப்டன்ஷிப்பால் கொல்கத்தா வெற்றி கொடியை நாட்டியது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் மாஸ்டர் ஸ்டோக்களை தற்போது காணலாம்.

பிளேயிங் லெவனில் புதுமை
முதலில் பிளேயிங் லெவனில் கூட புதுமையை புகுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடலாம். ஆனால் ஸ்ரேயாஸ் பரவாயில்லை எனக்கு 3 வெளிநாட்டு வீரர்கள் போதும் என்று தைரயமாக முடிவு எடுத்து, சுனில் நரைன், ரஸில், பில்லிங்ஸ் உடன் நிறுத்தி கொண்டார்,

ஃபில்டிங் செட்அப்
மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்ட சென்னையை லாவமாக ஸ்ரேயாஸ் படை சமாளித்தது. அதற்கு காரணம், சீனியர் வீரரான உமேஷ் யாதவை நம்பி, அவரது திறமையை பயன்படுத்தினார். சிஎஸ்கே வீரர்கள் எந்த திசையில் அடிப்பார்கள் என்று ஹோம்ஒர்க் செய்து, ஃபில்டர்களை நிறுத்தி, ரன் அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினார்.

மாஸ்டர் ஸ்டோர்க்
குறிப்பாக ராபின் உத்தப்பா ஃபிளிக் செய்து, பின்புறம் ரன் அடிப்பார் என்பதற்காக அங்கே ஒரு ஃபில்டரை நிறுத்தினார் ஸ்ரேயாஸ். இதே போன்று முதல் 5 ஓவர் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர். பின்னர் சுழற்பந்துவீச்சு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி சிஎஸ்கே வீரர்களுக்கு நெருக்கடி அளித்தார். சுழற்பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடிப்பார்கள். இதனால் ஃபில்டரை எல்லை கோட்டில் மற்ற கேப்டன்கள் நிறுத்துவார்கள்.
Recommended Video

நெருக்கடி
அதனை பயன்படுத்தி கொண்டு பேட்ஸ்மேன்கள் சிங்கிள்ஸ் ஆடி நெருக்கடி இல்லாமல் விளையாடுவார்கள். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் சிங்கிள்ஸ் போவதை ஃபில்டர்கள் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால், வருண் சக்ரவர்த்தியும், சுனில் நரேனும் ஒரே பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து பந்துவீசி அழுத்தத்தை கொடுத்து பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்தார். இது அப்படியே கம்பீரின் யுத்தி போல் இருந்தது. இதனால் இந்தியாவின் அடுத்த கேப்டனாக மாறும் தகுதி கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications