Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- அடுத்த தோனிக்கு வந்த சோதனை.. ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த தடாலடி முடிவு

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 8வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. கொல்கத்தா அணியின் ரஸில் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

இதுவரை 2 போட்டியில் விளையாடியுள்ள நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒரு போட்டியில் தோல்வியை கண்டுள்ளது. இந்த நிலையில் முதல் வாரத்திலேயே கொல்கத்தா அணி ஓய்வின்றி மூன்றாவது போட்டியில் விளையாடுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை டேத் பவுலிங் மோசமாக உள்ளது. அந்த குறையை தீர்க்க இன்றைய ஆட்டத்தில் ரபாடா பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

ரபாடா

ரபாடா

.2019 ஐபிஎல் முதல் டெத் ஓடவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பீந்துவீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். 16 ஓவர் முதல் 20 ஓவர்கள் வரை உள்ள காலக் கட்டத்தில் ரபாடா இதுவரை 63.4 ஓவர்கள் வீசி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் ரஸில் பேட்டிங்கிற்கு வந்தால் ரபாடாவுக்கு பந்து வீச அனுமதிக்க கூடாது. ஏனெனில் இதுவரை ரஸிலுக்கு 27 பந்துகளை வீசி 60 ரன்கள் ரபாடா விட்டு கொடுத்துள்ளார்.

பிட்ச்

பிட்ச்

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிகளும், கொல்கத்தாவும் 29 முறை மோதியுள்ளனர். இதில் கேகேஆர் அணி 19 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் மோதியுள்ளது. வான்கடே மைதானத்தில் கேகேஆர் அணி கடைசியாக விளையாடிய 12 போட்டியில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. எனினும் சிஎஸ்கேவுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உத்வேகமாக கேகேஆர் அணி உள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை அண்டர் 19 வீரர் ராஜ் பவா, முதல் ஆட்டத்தில் தனது திறமையை காட்டாமல் டக் அவுட்டாகிவிட்டார். இதனால் இன்றைய போட்டியில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாக்சன் இல்லை

ஜாக்சன் இல்லை

கொல்கத்தா அணியின் ஷெல்டன் ஜாக்சன் அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஆனால், இன்றைய ஆட்டத்தில் அவர் அணியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அதற்கு காரணம் பந்துவீச்சை வலுப்படுத்த சிவம் மவியை சேர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். இதனால் விக்கெட் கீப்பிங் பொறுப்பை சாம் பல்லிங்ஸ் ஏற்கிறார்.

ஸ்ரேயாஸ் திட்டம்

ஸ்ரேயாஸ் திட்டம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவதாக அறிவித்தார். கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான மாயங் அகர்வால் ஒரு முறையும், ஷிகர் தவான் 2 முறையும் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளனர். இதனால் அவரை பவர்பிளேக்குள் பந்துவீசும் திட்டத்தை ஸ்ரேயாஸ் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, April 1, 2022, 19:37 [IST]
Other articles published on Apr 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+