Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐதராபாத் கனவை அழித்த கொல்கத்தா.. புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றம்.. ப்ளே ஆஃப் ரேஸ் சூடுபிடித்தது!

புனே: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

61வது லீக் போட்டியாக நடைபெற்ற இந்த மோதல் புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கேற்றார் போலவே சிறப்பான இலக்கை நிர்ணயித்தது.

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் சிக்கி ரகானே (28) கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (15), நிதிஷ் ராணா (26) என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் 94 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து கொல்கத்தா தடுமாறியது.

கடைசி நேர ரன் குவிப்பு

கடைசி நேர ரன் குவிப்பு

ஆனால் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் அணியை தூக்கி நிறுத்தினர். 29 பந்துகளை சந்தித்த பில்லிங்ஸ் 34 ரன்களும், 28 பந்துகளை சந்தித்த ஆண்ட்ரே ரஸல் 49 ரன்களையும் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது.

சொதப்பிய ஐதராபாத்

சொதப்பிய ஐதராபாத்

சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்கமே அதிர்ச்சி தான். கேப்டன் கேன் வில்லியம்சன் (9), ராகுல் திரிபாதி (9), நிகோலஸ் பூரண் (2), வாஷிங்டன் சுந்தர் (4) என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மட்டும் 43 ரன்களை அடித்தார். ஆனால் அவருக்கு யாரும் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை.

கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா வெற்றி

பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு

ப்ளே ஆஃப் வாய்ப்பு

இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணிக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட 14 புள்ளிகள் மட்டுமே வரும் என்பதால் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து சற்று விலகியுள்ளது. இதே போல ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்காக மோதி வருகின்றனர்.

Story first published: Saturday, May 14, 2022, 23:34 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+