Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் -ல் இருந்து முக்கிய வீரர் விலகல்.. கேகேஆர் -க்கு கடும் பின்னடைவு.. மாற்று வீரர் யார் தெரியுமா

மும்பை: ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்தின் மற்றொரு முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இறுதிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் ஒரு பின்னடைவாக, குஜராத் அணி வாங்கியிருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய், ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்தார். பயோ பபுளை காரணம் கூறினார்.

மற்றொரு வீரர் விலகல்

மற்றொரு வீரர் விலகல்

இந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் இங்கிலாந்தின் மற்றொரு அதிரடி வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் ரூ.150 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது பின்னடைவு தான் மிஞ்சியது.

ஹேல்ஸ் விளக்கம்

ஹேல்ஸ் விளக்கம்

இதுகுறித்து விளக்கம் கூறிய ஹேல்ஸ், பிபிஎல், பிஎஸ்எல் தொடர் என கடந்த 4 மாதங்களாக பயோ பபுள் பாதுகாப்பிற்குள் தான் இருக்கிறேன். அடுத்த 2 மாதங்கள் மீண்டும் குடும்பத்தை பிரிந்து பயோ பபுளுக்குள் இருக்க விருப்பம் இல்லை. நான் மன உளைச்சலுடன் விளையாடி அவுட்டாவது அணிக்கும் நேர்மையாக இருப்பதாக இருக்காது. எனவே எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தா அணி மூலம் சந்திக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

இந்நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரையும் கொல்கத்தா அணி உடனடியாக அறிவித்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் தான் அது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தி கோப்பையை வென்றுக்கொடுத்தார். ஆனால் இவர் மீது மெகா ஏலத்தில் எந்தவொரு அணியும் ஆர்வம் காட்டவில்லை. தற்போது மாற்று வீரராக ரூ.1.50 கோடிக்கு கொல்கத்தா அணியில் இணைகிறார்.

Recommended Video

IPL 2022: Lasith Malinga Returns To IPL, Joins Rajasthan Royals Coaching Staff | Oneindia Tamil
பிஞ்ச் அனுபவம்

பிஞ்ச் அனுபவம்

ஆரோன் ஃபிஞ்ச்-க்கு ஐபிஎல் தொடர் சரியாக அமைந்ததில்லை. கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடினார். ஆனால் 12 போட்டிகளில் அவரால் 268 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. மற்றபடி பிபில் தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடியிருந்ததால் அவரை சேர்த்துள்ளது கொல்கத்தா அணி.

Story first published: Saturday, March 12, 2022, 10:11 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+