Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சாமி இவன்.. கேகேஆரின் 10 ஆண்டு காத்திருப்பு.. சிஎஸ்கே போட்டியில் ஸ்ரேயாஸ் செய்த அசால்ட் சாதனை!

மும்பை: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையேற்ற முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணி தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றியுள்ளது.

Recommended Video

IPL 2022 :Kolkata Knight Riders Beat Chennai Super Kings By 6 Wickets | Oneindia Tamil

15வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணி மோதின.

இந்த போட்டியில் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கேவின் தோல்வி

சிஎஸ்கேவின் தோல்வி

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, தோனி மட்டுமே அரைசதம் அடித்து காப்பாற்றினார். இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்த வெற்றி கொல்கத்தாவுக்கு புதிய பயணத்தை தொடங்கி வைத்துள்ளது.

அடுத்த கம்பீர்

அடுத்த கம்பீர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கௌதம் கம்பீர் சென்ற பிறகு வியூகம் அமைப்பது, பேட்டிங் ஆர்டரை சரி செய்வது பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த குறையை தீர்த்து வைத்துள்ளார். பவுலர்களை தேர்வு செய்தது, எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்கான வியூகம் என தோனிக்கே டஃப் கொடுத்தார். இதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியின் 10 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தார்.

10 ஆண்டு காத்திருப்பு

10 ஆண்டு காத்திருப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணி கடந்த 10 ஆண்டுகளாக ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்து வந்தது. 11 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி தான். ஐபிஎல் வரலாற்றில் அங்கு சாதிக்க வேண்டும் என்பது அந்த அணிக்கு ஏக்கமாகவே இருந்தது. இந்நிலையில் அதனை தனது முதல் போட்டியிலேயே சரி செய்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். அதுவும் சென்னை போன்ற பலமான அணியை வென்று பெற்றுக்கொடுத்துள்ளார்.

பழித் தீர்க்கிறாரா ஸ்ரேயாஸ்

பழித் தீர்க்கிறாரா ஸ்ரேயாஸ்

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் கூட செல்ல முடியாமல் இருந்த டெல்லி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவரை டெல்லி அணி கழட்டிவிட்டது. அவர்களை பழிவாங்குவதற்காகவே இந்த சீசனில் ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து வெற்றியை பெற்றுக்கொடுக்க காத்துள்ளார்.

Story first published: Sunday, March 27, 2022, 14:51 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+