ஐபிஎல் - அனைத்திலும் கேகேஆர் மயம்.. ரஸில் பேட்டிங் குறித்து கிண்டல்.. படுகுஷியில் ஷாரூக்கான்
மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு கொல்கத்தா அணி பேட்டிங், பவுலிங், ஃபில்டிங் என மூன்று பிரிவிலும் கலக்கி வருகிறது.
கடந்த முறை இறுதிப் போட்டி வரை கேகேஆர் அணி, சிஎஸ்கே அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது.ஆனால் இம்முறை கேகேஆர் அணி அபாரமாக விளையாடி வருகிறது.
இதனால் கேகேஆர் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் மகிழ்ச்சியில் உள்ளார்.

கேகேஆர் அபாரம்
சீசன் தொடங்கியதும் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை அபார பந்துவீச்சு மூலம் 131 ரன்களில் கொல்கத்தா அணி சுருட்டியது. இதே போன்று பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்களில் சுருண்டாலும், பந்துவீச்சில் கடும் நெருக்கடி கொடுத்து போராடியது. இந்த நிலையில், 3வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை 137 ரன்களில் சுருட்டி வெற்றியையும் பெற்றது.

கேகேஆர் மயம்
இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்தது. பேட்டிங்கில் இன்று 70 ரன்கள் அடித்த ரஸில் அதிக ரன்கள் அடித்தற்கான ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். இதே போன்று இன்று 4 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக கொல்கத்தா அணி வீரர் உமேஷ் யாதவ் பர்பிள் நிற தொப்பியை கைப்பற்றினார்.

ஸ்ரேயாஸ் கேப்டன்ஷி
இதே போன்று கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் அசத்தி வருகிறார். வீரர்களுக்கு பந்துவீச்சை சுழற்சி முறையில் வழங்குவது, ஃபில்டிங் ஆட்களை சரியான இடத்தில் நிறுத்துவது, சூழலுக்கு ஏற்ப யுத்திகளை வகுத்து செயல்படுவது என அனைத்திலும் கலக்கி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால் பல முன்னாள் வீரர்களும் ஐயரை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

ஷாரூக்கான் வாழ்த்து
இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் பதிவிட்டுள்ள டிவிட்டில், வெல்கம் பேக் மை ஃபிரண்ட் என்று ரஸிலை குறிப்பிட்டு, பந்துகளை சிக்சருக்கு இப்படி பறந்ததை நான் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார்.


Click it and Unblock the Notifications