ஐபிஎல்- பஞ்சாப் அணிக்கு வரும் பிளாக் பாந்தர்.. இனி கலக்கல் தான்.. அணியின் ஒரு குறையும் நீங்கியது
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் பலமான அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. எனினும் பஞ்சாப் அணியின் டெத் ஓவர் மோசமாக இருந்தது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட பஞ்சாப் அணி கடைசி 10 ஓவரில் 135 ரன்களை பந்துவீச்சில் விட்டு கொடுத்தது.
எனினும் பேட்டிங் செய்யும் போது இமாலய இலக்கை, பஞ்சாப் அணி வீரர்கள் எட்டினர்.

பிளாக் பாந்தர்
இந்த நிலையில், பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள ரபாடா, குவாரண்டைன் முடிந்து, கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஐபிஎல் முதல் டெத் ஓடவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பீந்துவீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். 16 ஓவர் முதல் 20 ஓவர்கள் வரை உள்ள காலக் கட்டத்தில் ரபாடா இதுவரை 63.4 ஓவர்கள் வீசி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரபாடா Vs ரஸில்
எனினும் ரபாடாவுக்கும், ஆண்டிரு ரஸிலுக்கும் ஏழாம் பொருத்தம். இதுவரை ரஸிலுக்கு 27 பந்துகளை வீசி 60 ரன்கள் ரபாடா விட்டு கொடுத்துள்ளார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ரபாடாவை தனது பேட்டிங் மூலம் ரஸில் வரவேற்பது சந்தேகமே. இதே போன்று பஞ்சாப் அணி வீரர் சந்தீப் சர்மாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஸ்ரேயாஸ் ஐயர் திணறி இருக்கிறார்.

நேருக்கு நேர்
இதுவரை சந்தீப் சர்மாவிடம் 3 முறை ஸ்ரேயாஸ் ஐயர் வீழ்த்தியுள்ளார். சந்தீப் சர்மாவை எதிர்கொள்ளும் போது ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கு கீழ் சென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிகளும், கொல்கத்தாவும் 29 முறை மோதியுள்ளனர். இதில் கேகேஆர் அணி 19 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் மோதியுள்ளது.

வான்கடே மைதானம்
வான்கடே மைதானத்தில் கேகேஆர் அணி கடைசியாக விளையாடிய 12 போட்டியில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. எனினும் சிஎஸ்கேவுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் உத்வேகமாக கேகேஆர் அணி உள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை அண்டர் 19 வீரர் ராஜ் பவா, முதல் ஆட்டத்தில் தனது திறமையை காட்டாமல் டக் அவுட்டாகிவிட்டார். இதனால் இன்றைய போட்டியில் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications